எம்மை குறித்த தகவல்கள்

எமது செயல்பாடுகள்
உலகின் மூத்த மொழியாம் தமிழ் மொழி, பல நாடுகளில், பல கோடி மக்களால் பேசப்பட்டு வந்தாலும், இன்றைய சூழலில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு பின் தங்கிய நிலையையே கொண்டுள்ளது.

சிந்தனை, சொல், செயல் என அனைத்திலும் தமிழை பயன்படுத்த நாம் முற்பட்டிருந்தாலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில், தமிழ் மொழியின் வளர்ச்சியை ஏற்படுத்துவதே தமிழ் மொழியின்பால் தமிழர்களாகிய நாம் கொண்டிருக்கும் பற்றிற்கு பயன் தருவதாக இருக்கும்.

அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.

இதற்கான முதல்படி, இணையத்தில் தமிழின் பயன்பாட்டை முழுமையாக கொண்டுவருவது, துவக்கப் பள்ளி பயிலும் மாணவ மாணவியரையும், தமிழ் வழியில் அறிவியலை சிந்திக்கவும், தொழில் நுட்பம் சார்ந்த விடயங்களை பேசவும், கலந்தாயவும், எழுதவும் தூண்டுதல்.

“வாழ்க தமிழ்” என்று உரத்த குரலில் முழக்கம் இடுவதால் கிடைக்கும் பயனைவிட, கணிணி மென்பொருள் பயன்பாட்டிலும், இணைய பயன்பாட்டிலும், அறிவியல், தொழில் நுட்பம் கற்றலிலும் தமிழ் மொழியின் பயன்பாட்டை ஊக்குவித்தலே சிறந்தது என்ற ஒரே நோக்கத்துடன் செயலாற்றுவதே ஓசூர் ஆன்லைனின் முதல் பணி.

தன் செயல்பாடுகளாக கீழ் தொகுக்கப்பட்டுள்ளவற்றை கொண்டுள்ளது:

1. தரமான அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வு அறிக்கைகள், தொழில்நுட்பம் சார்ந்த விளக்கங்களை எளிய தமிழில், துவக்கப்பள்ளி மாணவ மாணவியரும் ஆர்வத்துடன் வாசித்து புரிந்துகொள்ளத்தக்க வகையில், இணையத்தில் வெளியிடுதல்.

2. துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலை பள்ளி மாணவ மாணவியருக்கு, தொழில்நுட்பம் சார்ந்த செயல் முறைக்கல்வி இணையத்தின் வழியாக வழங்கபடும்.

3. அறிவியல் செயல்முறை விளக்கங்களை, மாணவ மாணவியர்கள் தூய தமிழில் காட்சியகங்களாக நடத்திட ஊக்குவிக்கும் விதமாக, பள்ளிகள் தோறும் போட்டிகள் நிகழ்த்தப்படும். வெற்றிபெறும் மாணவ மாணவியருக்கு பரிசுப் பணம் வழங்கப்படும்.

4. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சொற்பொழிவுகள், துறை வல்லுநர்களைக் கொண்டு, மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தூய தமிழில் நடத்தப்படும்.

5. கணிணி மற்றும் இணைய மென்பொருட்களை தமிழாக்கம் செய்தல்.

6. பிற மொழி கற்பதை விட கணிணி மொழிகள் கற்பது வாழ்வாதாரத்தை உயர்த்த வழிவகை செய்யும் என மாணவ மாணவியரிடம் புரிதல் ஏற்படுத்துதல்.

7. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தமிழ் நூல்களை தரமான ஆசிரியர்கள் கொண்டு எழுதி வெளியிடுதல்.

இவ்வாறான தொடர் முயற்சியின் மூலம்

1. மாணவ மாணவியர், தம் மொழியாம் தமிழ் மீது பற்றுகொண்டு, பின்வரும் வாழ் நாட்களில், தமிழ் மொழிக்கு தங்களால் ஆன அறிவியல் வளர்ச்சி சேவையாற்ற ஊக்கப்படுத்தப்படுவார்கள்.

2. பிற மொழி கற்றலே தமிழர் வாழ்வாதாரம் சிறக்க வழி என்ற அடிமைச் சிந்தனையை மாய்த்து, தமிழ் மொழி கற்றலே வாழ்வாதாரத்தின் வழி என்ற நிலையை மக்களிடத்தே கொண்டுவருதல்.

3. தமிழ் வழி அறிவியல் அறிவு மூலம் பொருளாதார ரீதியில் தனி மனிதர்கள் வாழ்வில் முன்னேற்றம் பெற உதவுதல்.

4. வரும் நாட்களில், ஆய்வுகளும், ஆராய்ச்சிகளும் தமிழ் வழியில் நடைபெற வழிவகுத்தல்.

இணைந்திடுவோம் தமிழராய்… உயர்ந்திடுவோம் தமிழராய்…Our Motto

” Ride on your own strength; Not on competitors’ weakness”

Our Business

“Giving information is our business”. Get informed and entertained while online.

About

Started in the year 2002, as a web portal company, HosurOnline positioned itself as a leading entertainment portal.

HosurOnline was created to deliver quality content useful for all groups of people, both general public and for people in commerce and businesses living worldwide.

HosurOnline offers a broad and varied range of Internet products, services and solutions to all walks of people in this world.

As a first step to move forward in achieving the set goal, HosurOnline’s founder Soosai Prakash A developed an approach, where a product or service marketed by HosurOnline will be the best available in this universe, with the motto “Ride on your own strengths; Not on competitor’s weakness”.

Though the business is named as HosurOnline, a name that sounds as if a location specific business only for Hosur Town, we have not only made the website ‘HosurOnline’ with an universal approach along with providing useful contents about Hosur, we have adopted other business categories with universal thought and approach.