ஓசூர் முக்குலத்தோர் நலச்சங்கம் சார்பில் 117 வது தேவர் ஜெயந்தி விழாவும் 62 ஆவது குருபூஜையும் ஓசூர் உள்பட்ட சாலை முனீஸ்வரர் நகர் சந்திப்பில் 30 அக்டோபர் காலை 10 மணி அளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், ஓசூர் முக்குலத்தோர் சங்கத்தின் தலைவர் திரு சிவக்குமார், செயலாளர் திரு ராமசாமி, பொருளாளர் திரு பாண்டித்துரை, முன்னாள் நிர்வாகிகள் திரு நடராஜன், அகஸ்தியா வித்யா மந்திர் பள்ளி திரு பாண்டியன், திரு முத்துராமலிங்கம், முனீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்த திரு முத்தரசு, திரு பாலு, ஆலோசனை குழு உறுப்பினர் திரு ஞானசேகரன் மற்றும் ஏராளமான சங்க உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் முடிவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.