ஓசூர் அடுத்த, கெலமங்கலம் சாய்பாபா கோவில் எதிரே, புதியதாக வீடு கட்டி, கடந்த திங்கட்கிழமை குடி புகுந்த, ஸ்டேஷனரி கடை நடத்தி வரும், 40 வயதுடைய பிரேம்ராஜ், மாடி மீது உள்ள குழாய்களை சரி செய்துள்ளார்.
அப்போது கால் வழுக்கி, அருகிலிருந்த உயர் அழுத்த மின் வடங்களின் மீது விழுந்து, மின் வடங்களில் சிக்கிக் கொண்டதில், அவரது இடுப்பு மற்றும் கால் பகுதியில் தீ பற்றி எரிந்தது.
விபத்து நடந்தும், மின்சாரம், தானாக துண்டிக்கப்படாத நிலையில், அருகில் இருந்தவர்கள், காய்ந்த மர கம்புகளை கொண்டு, அவரை கீழே தள்ளி விட்டனர்.
60 விழுக்காடு தீக்காயங்களுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில், ஓசூர் தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார்.
வீட்டின் மாடி பகுதிகளில், இரும்பு கம்பிகள் மற்றும் மின் கடத்த தக்க பொருட்களை கையாளுபவர்கள், வீட்டின் அருகே மின்வடங்கள் கடந்து செல்வதை கவனத்தில் கொண்டு, எச்சரிக்கையுடன் செயல்பட, தன்னார்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.