ஒசூா், பாகலூா் சாலையில் உள்ள காளேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர், 53 வயதுடைய சசிகலா.
இவர் அரசுப் பள்ளியில், ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா். இவர், கடந்த 26 ஆம் நாள், வீட்டை பூட்டி விட்டு, பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பூட்டி சென்ற வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது குறித்து, தோட்டப் பணியாளர் ஒருவர், சசிகலாவிற்கு, நவம்பர் இரண்டாம் நாள் மாலை தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்த சசிகலா, வீட்டிற்கு விரைந்து வந்து, பொருட்களை சரி பார்த்தபோது, பீரோவை உடைத்து, நகை, ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருள்கள், திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
சசிகலா, நல்லூர் காவல் நிலையத்தில், திருட்டு குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து வினவி வருகின்றனர்.