கை அல்லது கால் இழந்தவர்களுக்கு, ஆதரவு கரம் நீட்டுகிறார், ஓசூரை சேர்ந்த, திரு மோகன்ராஜ் அவர்கள். இவர், கால்களை இழந்தவர்களுக்கு, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில், அரை எண் முப்பத்தி ஏழில் செயல்பட்டு வரும் BMVSSல், முன்னேற்பாடுகள் செய்து தருகிறார். நபர் ஒருவருக்கு, இந்த செயற்கை கால்களுக்காக, ரூபாய் நாற்பதாயிரம் வரை செலவிடப்பட வேண்டிய சூழலில், விலை இல்லாமல், இங்கு வழங்கப்படுகிறது.
பகவன் மகாவீர் விக்லங் சகாயதா சமிதி, BMVSS, ஜெய்பூரை தலைமை இடமாகக் கொண்டு, உலகம் முழுவதிலும் இருந்து, நன்கொடைகள் மற்றும் ஆதரவு கரங்கள் பெற்று, ஜெய்ப்பூர் காலனி, வழங்கி வரும் தொண்டு நிறுவனமாகும்.
முழங்கை வரை கையிருந்து, கையின் ஒரு பகுதியை இழந்தவர்களுக்கு, அமெரிக்காவின், எல்லன் மிடோஸ் பவுண்டேஷன், என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக, செயற்கை கைகளுக்கு, விலையில்லாமல் ஏற்பாடு செய்து தருகிறார்.
செயற்கை கை அல்லது கால் பெற்றவர்கள், தாங்கள் பெற்றுச் சென்ற செயற்கை கை அல்லது கால் பழுதடைந்தால், அதற்கும், மாற்று ஏற்பாடுகளை இவர் செய்து தருகிறார்.
திரு மோகன்ராஜ் அவர்களின், வழிகாட்டுதல் தேவை உள்ளவர்கள், அவரை, 9842493737 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
இந்த தகவல், பயனுள்ளது என நீங்கள் உணர்ந்தால், உங்களது உற்றார் உறவினர், நண்பர்கள் வட்டாரத்திற்கு, இந்த செய்தியை முன் அனுப்புங்கள்.