Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூரை அச்சுறுத்தும் ஒற்றை யானை, அலறியடித்து ஓடும் மக்கள்!

தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள அய்யூர் காட்டுப் பகுதியில் காட்டு யானைகள், காட்டு எருமைகள், மான்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட மிருகங்கள் வாழ்கின்றன. காட்டுப்பகுதியில் இருந்து, உணவு மற்றும் தண்ணீரை தேடி, வெளியேறும் காட்டு யானைகள் உள்ளிட்ட காட்டு மிருகங்கள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது வாடிக்கையாக உள்ளது.

இன்று வியாழக்கிழமை காலை, அய்யூர் காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை திடீரென அருகில் உள்ள மேலூர் ஊருக்குள் புகுந்தது. 

ஒற்றை காட்டு யானையை கண்ட பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். 

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: