சுமார் 14 ஆண்டுகளாக சாலை அமைத்து தர கோரிக்கை வைத்த நிலையில், சாலை அமைத்து தரப்படுவதால், பகுதி மக்கள் மகிழ்ச்சி!
ஓசூர் மாநகராட்சி இருபத்து இரண்டாவது வார்டு, முனீஸ்வரர் நகர் பகுதியில் உள்ள சீனிவாசா கார்டன் குடியிருப்பில், ஏராளமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் வாழும் மக்கள், கடந்த 14 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் இருந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர் என் எஸ் மாதேஸ்வரன் ஆகியோர், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷிடம், புதிய சாலை அமைத்து தர கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் ஒன்பதரை லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்க கடந்த நாள், 13 நவம்பர், வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்வில், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ், மேயர் எஸ் ஏ சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, இருபத்து இரண்டாவது பகுதி மாமன்ற உறுப்பினர் என் எஸ் மாதேஸ்வரன், குடியிருப்பு பகுதி குடியிருப்போர் நலச் சங்க உறுப்பினர்கள் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.
அப்பகுதி மக்கள் ஓசூர் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தனர்.