ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஓசூர் ஊராட்சி ஒன்றியம், நல்லூர் ஊராட்சி, சித்தன்னபள்ளி ஊரில், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில், சுமார் ரூபாய் ஒன்பது லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் தத்வா சிட்டி - சஷ்டி அவுன்யூ மெயின் சிமெண்ட் சாலை அமைக்கப்படுகிறது.
சஷ்டி அவுன்யூ பகுதியில், அனைத்து தெருக்களில் paver blocks அமைப்பதற்கு, சுமார் ரூபாய் 10 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை வழிபாடுகள் செய்து, ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில், பகுதியில் குடியிருக்கும் மக்கள், மகிழ்வுடன் கலந்து கொண்டு, ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.