ஓசூருக்கு 15 யானைகள் படையெடுத்துள்ளதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை.
ஆண்டுதோறும், இந்த ஊழியில், யானைகள் இடம்பெயர்வது, வாடிக்கையான ஒன்று. கர்நாடகா மற்றும் ஓசூரின் காட்டுப்பகுதிகளில் இருந்து, காட்டு யானைகள் வெளியேறி, பல்லாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த அவற்றின் வழித்தடங்கள் வழியாக ஆந்திர எல்லை வரை சென்று, மீண்டும், தங்களது வழக்கமான இருப்பிடத்திற்கு திரும்பும்.
அவற்றின் வழித்தடங்களில் மனிதர்கள் குடியேறிவிட்டதால், யானைகளுக்கும் மனிதர்களுக்குமான மோதல் ஆண்டுதோறும் நடைபெறுவது வாடிக்கை. கடந்த நாள், சுமார் 15 யானைகள், தேன்கனிக்கோட்டை பகுதியில் இருந்து, ஓசூர் அருகே சாணமாவு பகுதிக்கு வந்துள்ளன. வரும் வழியில், விளை நிலங்களில் புகுந்து, தங்களுக்கு தேவையானவற்றை உண்டு மகிழ்ந்ததால், பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் சேதமடைந்துள்ளன.
யானைகள் ஓசூர் அருகே முகாமிட்டுள்ளதால், வனத்துறையினர், மாலை வேலைகளில் காட்டுப்பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும், விளை நிலங்களுக்கு எச்சரிக்கையுடன் சென்று வரும்படியும், ஆடு மாடு மேய்ச்சலுக்கு காட்டுப்பகுதிகளுக்கு செல்பவர்கள் கவனமுடன் இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளனர்.