கடந்த நாள் இரவு ஆலஹள்ளி காட்டுப்பகுதியில் இருந்து 3 காட்டு யானைகள், குடியிருப்பு பகுதியில் பயிரிட்டு உள்ள ராகி, தக்காளி உள்ளிட்ட விளை பயிர்களை தின்பதற்காக வந்துள்ளது. தகவல் அறிந்து அங்கு சென்ற தேன்கனிக்கோட்டை வனத்துறையினர், பட்டாசுகள் வெடித்து காட்டு யானைகளை விரட்டினர்.
இதில் இரண்டு காட்டு யானைகள் அங்கிருந்து ஓடிய நிலையில், பட்டாசுக்கு அஞ்சாத ஒரு காட்டு யானை, வனத்துறையினரிடம் மல்லுக்கு நின்றது.
திடீரென வனத்துறையினர் மற்றும் பொதுமக்களை கடும் கோபத்துடன் விரட்டியது. தனது எதிர்ப்பை பதிவு செய்துவிட்டு காட்டுக்குள் சென்றது.