கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஓசூர் சென்னை சில்க்ஸ் அருகே, அரசனட்டி பகுதியில், பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த பெண் மற்றும் அவருக்கு மருத்துவ பயிற்றுவித்த பி ஃபார்ம் பெண் என இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோன்று ஏற்கனவே, சின்ன எலசகிரி பகுதியிலும், போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, மூல நோய்களுக்கு, அறுவை மருத்துவம் செய்து வந்ததாக கைது செய்யப்பட்டு, சிறை சென்று வந்த, மெஹபூம்பாஷா மீண்டும் அதே குற்றச் செயலில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், ARRS சில்க்ஸ் அருகே, கடந்த பல ஆண்டுகளாக, போலி ஆங்கில மருத்துவமனை நடத்தி, பலருக்கு மூலம் நோய்க்கான அறுவை மருத்துவம் மேற்கொண்டு வந்துள்ளார் என்கிற அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.
இன்று, வெள்ளிக்கிழமை மாலை, ஓசூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஞானமீனாட்சி அவர்கள் மற்றும் ஓசூர் சரக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர், ராஜீவ் காந்தி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் மற்றும் ஓசூர் காவல்துறையினர், ஆய்வு மேற்கொண்டு, இவரை கைது செய்து, அவர் நடத்தி வந்த மருத்துவமனையை மூடி முத்திரை இட்டுச் சென்றனர்.