ஓசூரில் உள்ள கடைகளுக்கு, தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவில் வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஒன்றிய அரசுக்கு செல்லும் தூய்மை இந்தியா திட்டத்தின் குப்பை வரி உயர்வை கண்டித்து, உயர்த்திய வரியை திரும்ப பெற வலியுறுத்தி, வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில், மாநகராட்சி அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர் மாநகராட்சி, திமுக தலைமையிலான மேயரின் கீழ் செயல்பட்டு வருகிறது. வணிகர்களுக்கு பல மடங்கு வரியை உயர்த்தி, கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும் ஒன்றிய அரசுக்கு செல்லும் தூய்மை இந்தியா திட்டம் குப்பை வரியை 2017 முதல், பழைய நிலுவை, எனக்கூறி ஏழு ஆண்டுகளுக்கு சேர்ந்து கணக்கிட்டு, இப்போது உடனடியாக, வரியினை கட்ட வேண்டும் என கூறி ஓசூர் மாநகராட்சி நோட்டீஸ் வழங்கி, கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
இதனை கண்டித்து வணிகர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், மாநகராட்சி அலுவலகம் முன்பாக, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உய்த்தப்பட்ட வரியை திரும்ப பெற வேண்டும், குப்பை வரியை ஏழு ஆண்டுகளாக வசூல் செய்ய தவறி விட்டு, இப்போது ஒரே தவணையாக கட்டச் சொல்லும் ஆணையை திரும்பப் பெற வேண்டும், என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.