ஓசூரில் சுடுகாட்டை, நூலகமாக மாற்றக் கோரிக்கை. ஓசூர் மேயர் S A சத்யா அதிர்ச்சியில் உறைந்து போனார். இடுகாடு எங்கள் பகுதியில் இருக்கட்டும், மின் சுடுகாடு வேண்டாம், மக்களின் கோரிக்கையை கேட்டு, குழம்பிப் போன ஓசூர் மேயர்! கேட்பதுதான் கேட்கிறீர்கள், ஒரு நியாயம் தர்மமான கோரிக்கையை கேளுங்கள், என பொதுமக்களிடம் கூறிய மேயர்.
ஓசூர் மாநகராட்சி சார்பில், ராயக்கோட்டை சாலையை ஒட்டியுள்ள முல்லை நகர் பகுதியில், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிய தொழில்நுட்பங்கள் கூடிய மின் மயானம் அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, அதே இடத்தில் இடுகாடு இருக்கும் நிலையில், மின் மயானத்திற்கான பணிகள் முடிக்கப்பட்டு, விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.
அருகிலுள்ள முல்லை நகர், சானசந்திரம், வ ஊ சி நகர், திருவிக நகர், மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஆகிய குடியிருப்பு பகுதிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர். அப்பகுதியில், இரண்டு கோயில்களும், அரசு பள்ளிகளும் உள்ளன. மின் மயானத்திற்கான கட்டுமான பணிகள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வர இருக்கின்ற வேளையில், அப்பகுதி பொதுமக்கள் மின் மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர், Shrikanth அவர்களை நேரில் சந்தித்து முறையீடு செய்தனர்.
பின்னர், மேயர் அலுவலகத்தில், மேயர் எஸ் ஏ சத்யா அவர்களை நேரில் சந்தித்த அவர்கள், தங்களது கோரிக்கையை முன் வைத்தனர். பொறுமையாக கேட்டுக் கொண்ட மேயர் எஸ் ஏ சத்யா அவர்கள், கோரிக்கையில் இருக்கும் குறைபாடு குறித்து தனது கருத்தை வெளிப்படையாக, எவ்வித அரசியல் உள்நோக்கமும் இன்றி, தெரிவித்தார்.
வந்திருந்தவர்கள், நடவடிக்கை எடுப்பதாக, கூறுங்கள் என வலியுறுத்தியதன் அடிப்படையில், தேவையான நடவடிக்கை எடுப்பதாக மக்களிடம் தெரிவித்தார்.