Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் மாணவர், பெண் மருத்துவர்கள் பிரிவு கழிவறைக்கு சென்றாரா? அங்கு என்ன நடந்தது?

ஓசூர் மாணவர், பெண் மருத்துவர்கள் பிரிவு கழிவறைக்கு சென்றாரா? அங்கு என்ன நடந்தது? தகவல் வெளியாகி பிற மாணவ மாணவியர் மற்றும் மருத்துவர் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! ஓசூரை சேர்ந்த கல்லூரி மாணவர் சந்தான கோபாலன், கடந்த நாள், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள, பெண்களுக்கான உள் நோயாளிகள் பிரிவில் உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார்.  அவர் நீண்ட நேரமாகியும் வெளியில் வரவே இல்லை! உள்ளே என்ன நடந்தது? 

ஓசூரை சேர்ந்த இருபத்தி இரண்டு வயது உடைய சந்தான கோபாலன், நாமக்கல்லில் உள்ள பி ஜி பி பார்மசி கல்லூரியில், Doctor in Pharmacy என்கிற ஐந்து ஆண்டுகள் பட்டப்படிப்பில், நான்கு ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.  இந்நிலையில், கடந்த இரண்டரை மாதங்களாக House Surgeon எனப்படும் பயிற்சி மருத்துவராக, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயின்று வந்துள்ளார். 

மாணவர் சந்தான கோபாலன் நேற்று வழக்கம் போல் பயிற்சிக்கு வந்துள்ளார். உள்நோயாளிகளுக்கான பெண்கள் பிரிவில் உள்ள மருத்துவர்களுக்கான கழிவறைக்கு சென்ற மாணவர் சந்தான கோபாலன், நீண்ட நேரம் கடந்தும் வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஐயமடைந்த அவருடன் பயிலும் பிற மாணாக்கர்கள், கழிவறைக்கு சென்று கதவை தட்டி உள்ளனர். ஆனால், சந்தான கோபாலன் எவ்வித பதிலும் கூறாமல், ஓசை இன்றி இருந்துள்ளார். 

அதிர்ச்சி அடைந்த மாணாக்கர்கள், பிற மருத்துவமனை ஊழியர்களின் துணை கொண்டு, கதவை உடைத்து உள்ளே பார்த்துள்ளனர்.  அப்போது மாணவர் சந்தான கோபாலன், மயங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை உடனடியாக மீட்டு, மருத்துவம் கொடுக்க மருத்துவர்கள் முயன்றுள்ளனர்.  ஆனால் முயற்சிகளுக்கு பலனின்றி, அவர் உயிரிழந்தார்.  

இது குறித்த தகவல், நல்லிபாளையம் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது.  காவலர்கள் விரைந்து வந்து, முதற்கட்ட ஆய்வு மேற்கொண்ட போது, அவர் மயங்கி கிடந்த கழிவறையினுள், மயக்க மருந்து குப்பி, மருந்து ஊசி மூலம் ஏற்றுவதற்கான கருவிகள், ஆகியவை கிடந்துள்ளது. 

சந்தான கோபாலன், அறுவை மருத்துவத்திற்கு பயன்படும் மயக்க மருந்து, தமக்குத் தானே உடலில் ஊசி மூலம் ஏற்றி உயிரை விட்டிருக்கலாம் என்கிற ஐயம் எழுந்துள்ளது. 

If you or someone you know are feeling suicidal, there is hope. If you are in crisis or looking for suicide help in India, you can call 104 or 1056 helpline that is equipped to handle suicide prevention.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: