ஓசூர் 108 ஆம்புலன்ஸ் Emergency medical technician மதுபாலா மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் Pilot ராம்குமார் ஆகியோர் மலைவாழ் மக்களால், பாராட்டு மழையில் நனைந்து வருகின்றனர். அவர்கள் இருவரையும், பொதுமக்களும், மருத்துவர்களும் மனதார பாராட்டுவது ஏன்?
தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டாரத்தில், ஏராளமான மலைப்பகுதி ஊர்கள் உள்ளன. இப்பகுதிகளில், மலைவாழ் பழங்குடியின மக்கள், வாழ்ந்து வருகிறார்கள். பெரும்பாலான மக்கள், தமிழ்நாடு அரசின் சிறப்பு கவனத்தை பெற்று வரும் நிலையில், மருத்துவ தேவைக்கும், வாழ்க்கை மேம்பாட்டிற்கும், பெரும்பாலும் அரசின் திட்டங்களைச் சார்ந்தே வாழ்கிறார்கள்.
தேன்கனிக்கோட்டை வட்டம், இருதுகோட்டை ஊரின் அருகில், திருமாநகர் என்னும் மலைவாழ் ஊர் உள்ளது. இவ் ஊரைச் சேர்ந்தவர் சித்தலிங்கம். இவரது மனைவி 24 வயதுடைய நாகம்மா. இவர்களுக்கு ஏற்கனவே குழந்தை ஒன்று உள்ள நிலையில், இரண்டாவது குழந்தைக்கு கருவுற்றிருந்தார் நாகம்மா. இன்று, நாகம்மாவிற்கு மகப்பேறுக்கான வலி ஏற்பட்டுள்ளது. இத்தகவல் ஓசூர் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் Pilot ராம்குமார், Emergency medical technician மதுபாலா ஆகியோர், நாகம்மாவை, மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்காக, தகவல் தெரிந்த 38 வது நிமிடத்தில், திருமாநகர் ஊரில் இருந்தனர். நாகம்மாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனை நோக்கி, ஆம்புலன்ஸ் விரைந்த போது, ஆம்புலன்ஸ் உள்ளேயே, அழகான பெண் குழந்தையை, Emergency medical technician மதுபாலா உதவியுடன், நாகம்மா பெற்றெடுத்தார்.
இத்தகவல், அரசு மருத்துவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மருத்துவர்களின் அறிவுரைப்படி, தேன்கனிக்கோட்டை அருகே உள்ள, உனிசெட்டி துவக்க நிலை மக்கள் நல வாழ்வு நடுவத்தில், தாயும் குழந்தையும் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவ நிலை அறிந்து திறம்பட செயல்பட்ட Emergency medical technician மதுபாலா மற்றும் Pilot ராம்குமார் ஆகியோரை, மலைவாழ் ஊர் மக்களும், பகுதி பொதுமக்களும், மருத்துவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இச்செய்தியை அறிந்து கொண்ட நீங்களும், அவர்களுக்கு Comment Section ல் உங்களது பாராட்டு கருத்தை பதிவிடுங்களேன்!