Hosur News, ஓசூர் செய்திகள் - தேன்கனிக்கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா

தேன்கனிக்கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.  தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள், தங்களது குடும்பத்தாருடன், இவ்விழாவில் பங்கெடுத்து பெருமாளை வணங்கிச் சென்றனர்.  சுமார் 10 ஆயிரம் லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. நீண்ட நெடிய வரலாற்றை கொண்டது, தேன்கனிக்கோட்டையில் அமைந்துள்ள பேட்டராய சுவாமி கோவில்.  பகைவர்களின் படையெடுப்பின் போது, சுவாமியை பாதுகாக்க பகுதி மக்கள், காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்து, காவல் காத்தனர் என்பது வரலாறு. 

இச்சிறப்பு மிக்க பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி கடந்த நாள் நடைபெற்றது. சௌந்தரவல்லி தாயார் உடன் பேட்டராய சுவாமி கோயிலில் வீற்றிருக்கின்றனர். 

சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கு ஏற்பாடாக, சௌந்தரவல்லி தாயார் மற்றும் பேட்டராய சுவாமி ஆகியோருக்கு காலை முதல் பல வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. பல்வேறு சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றன. பேட்டராய சுவாமி மற்றும் சௌந்தரவல்லி தாயார் ஆகியோரை, மக்கள் தேரில் வைத்து, தோளில் சுமந்து, கோயிலை சுற்றி வலம் வந்தனர். அப்போது அங்கு திரண்டு இருந்த ஏராளமான அடியார்கள் சுவாமியை நம்பிக்கையுடன் வழிபட்டனர்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: