மாட்டு மூத்திரத்தை தொடர்ந்து மனித மூத்திரம்! சர்ச்சைக்கு உள்ளாகும் முன்னாள் அமைச்சரின் பேச்சு!. கடந்த நாள் ஓசூரில் அதிமுக கட்சியினருக்கான ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றபின், செய்தியாளர்களை K P முனுசாமி சந்தித்தார். K P முனுசாமியிடம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து பேசிய கருத்து குறித்து கேட்டபோது, பெரியார் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய தொண்டினையும், பெரியாரது கொள்கைகளையும் விரிவாக எடுத்துரைத்து, பெரியாரை புகழ்ந்தார்.
மெட்ராஸ் IIT இயக்குனர், மாட்டின் சிறுநீர் குறித்து கூறிய சர்ச்சைக்குரிய கருத்து குறித்து, K P முனுசாமி இடம் கேள்வி எழுப்பியவுடன், எரிச்சல் அடைந்த அவர், மொரார்ஜி தேசாய் எதை குடித்தார் என எதிர் கேள்வி கேட்டு, ஒரு நாட்டின் முதன்மை அமைச்சர், குடித்ததை பின்பற்றுங்கள் என்பது போன்று, தனது முகபாவனையை காட்டினார்.
மொரார்ஜி தேசாய் மற்றும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர், தங்களது மூத்திரத்தை தாங்களே விடிகாலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்தனர் என்பது கவனிக்கத்தக்கது. 1977ல், இதுகுறித்து மொரார்ஜி தேசாய் வெளிப்படையாக பேசி இருந்தது, இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் ஊடகங்களில் கேலிக்குரிய பேசுபொருளாக இருந்தது.
பலர் தங்களது சிறுநீர், மருத்துவ சிறப்பு தன்மை மிக்கது என கருதி, அதை பயன்படுத்தி வந்தனர். மேலும், சீனா, எகிப்து, ரோம் ஆட்சியாளர்களும் சிறுநீரில் மருத்துவ குணம் இருப்பதாக கருதினர்.
அறிவியல் வளர்ச்சியை தொடர்ந்து, சிறுநீர் குறித்தான நம்பிக்கை அகன்றது என்பது குறிப்பிடத்தக்கது.