ஓசூரில் தேங்காய் விலை தங்கம் விலை போன்று நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது ஏன்? தமிழர்களின் உணவுப் பொருட்களில் அடிப்படையாக இருக்கும் தேங்காய் மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவை, நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருகிறது.
ஓசூரைப் பொருத்தவரை தேங்காய் கிலோ ரூபாய் 65 என்ற விலையிலும் சின்ன வெங்காயத்தை பொருத்தவரை கிலோ ரூபாய் 100 என்ற விலையிலும் விற்கப்படுகிறது. தேங்காய் விற்பனையாளர் ஒருவரிடம் இது குறித்து நாம் வினவிய போது, கடந்த ஆண்டு, மழை பொழிவு சரியில்லாததாலும், நோய் தாக்குதலாலும், தென்னை பூக்கள் உதிர்ந்து விட்டன.
ஓராண்டு கடந்த நிலையிலும், முழுமையான உற்பத்தி திறனுக்கு மரங்கள் இன்னும் வரவில்லை. இன்னும் மூன்று நான்கு திங்கள்களில் விலை மட்டுக்குள் வரும் என்று கூறினார்.