ஓசூரில், நூற்று இருபது ரூபாய் திருடிய மூன்று கொள்ளையர்கள், கையும் களவுமாக சிக்கியது எப்படி? பத்திற்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகளை தம்மீது கொண்ட திருடன், நூற்று இருபது ரூபாயை, வீடு புகுந்து திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட செய்தி, ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!
ஓசூர் ராயக்கோட்டை சாலையில் உள்ள ஹில்ஸ் கிரஸ்ட் என்ற குடியிருப்பு பகுதியில், கடந்த பதினைந்தாம் நாள், வீடு புகுந்து, மூன்று பேர் கொண்ட கொள்ளை கும்பல், நூற்று இருபது ரூபாயை கொள்ளையடித்து சென்றதாக வீட்டின் உரிமையாளர் சிற்பி, சடையப்பன், ஓசூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது புகாரில், வீடு புகுந்து, ரூபாய் நூற்று இருபது கொள்ளை அடித்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்த நூற்று இருபது கிராம் தங்க நகைகள், வெள்ளி குத்துவிளக்குகள், ஆகியவற்றையும் எடுத்துச் சென்றதாக புகார் அளித்திருந்தார்.
ஓசூர் நகர காவல் துறையினர், இந்த கொள்ளை தொடர்பாக, வழக்கு பதிவு செய்து, கொள்ளையர்களை வலை வீசி தேடி வந்தனர். அந்த பகுதியில் இருந்த சி சி டி வி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து பார்த்ததில், மூன்று பேர், அந்த பகுதிக்கு இருசக்கர வண்டியில் வந்து சென்றது தெரியவந்தது.
தொடர்ச்சியாக, அடுத்தடுத்த சி சி டி வி கேமராக்களின் காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து பார்த்தபோது, அந்த மூவரில் ஒருவர், பத்துக்கும் மேற்பட்ட இடங்களில், வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்ததாக, ஏற்கனவே காவல்துறை பதிவேட்டில் உள்ள, சேலம் கொண்டலாம்பட்டியை சேர்ந்த ராட்டினம் சுற்றும் தொழிலாளி பிரபு என்பவரை அடையாளம் கண்டு, அவரது வீட்டில் வைத்து அவரை கைது செய்தனர்.
மற்ற இருவரில் ஒருவர், ஓசூர் திலகர் பேட்டையை சேர்ந்த ஓட்டுநர் பிரவீன் குமார் என்பதும், மற்றவர், ஊத்தங்கரை அருகே உள்ள, வீர குப்பம் பகுதியை சேர்ந்த கொத்தனார் தமிழரசு என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து, தனிப்படை காவலர்கள், அவர்கள் இருவரையும், அவரவர் வீட்டில் மடக்கி கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து மொத்தம் நூற்று இருபது கிராம் எடையிலான பதினோறு தங்க காசுகளையும், இரண்டு வெள்ளி குத்து விளக்குகளையும், இரண்டு இரு சக்கர வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
தங்க நகைகளை திருடிய மூன்று பேரும், தங்க நகைகளாக வைத்திருந்தால் காவல்துறையினரிடம் பிடிபட்டு விடுவோம் என கருதி, திருட்டு நகைகளை சேலத்திற்கு எடுத்து சென்று, தொள்ளாயிரத்து பதினாறு தரத்திலான தங்க காசுகளாக மாற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரில், பிரபு மீது, ஆளில்லாத வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்ததாக பத்திற்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள், தஞ்சாவூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளது. பிரபு, பிரவீன் குமார், தமிழரசு, ஆகியோர் பிற வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த போது நண்பர்களாகி உள்ளனர். மூன்று பேரும் சேர்ந்த பின், முதல் திருட்டாக, ஓசூரில் திருட்டு நிகழ்வை அரங்கேற்றியுள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.