Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூரில் மதுவிலக்கு அமலாக்க காவல்துறை சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

பள்ளி மாணாக்கர்களிடையே, போதை பொருள் பயன்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டும், பொதுமக்களுக்கு போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், மதுவிலக்கு அமலாக்க துறை சார்பில், ஓசூரில், மாணாக்கர்கள் பங்கேற்ற பேரணி இன்று நடைபெற்றது. 

ஓசூரில் மதுவிலக்கு அமலாக்க காவல்துறை சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆர்வி அரசு மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய இந்த பேரணியை A S P அக்ஷய் அனில் வாகரே மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு D S P சிந்து ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில், மீரா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சண்முகவேல் மற்றும் ஓசூர் நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர், திரு நாகராஜ் ஆகியோர் பங்கேற்றனர். 

இந்த விழிப்புணர்வு பேரணிக்கான ஏற்பாட்டை, ஓசூர் R V அரசு மேல்நிலைப்பள்ளி, பெருமாள் மணிமேகலை பல துறை தொழில்நுட்ப பட்டைய கல்லூரி, மீரா மருத்துவமனை உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

இந்த பேரணி ஓசூர் ராயக்கோட்டை சாலை, அசோக் பில்லர் மற்றும் நகரின் முதன்மையான தெருக்கள் வழியாக சென்று, ராயக்கோட்டை சாலையில் அமைந்துள்ள மீரா மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணாக்கர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு, போதை பொருளுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி, விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பி சென்றனர்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: