Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூரில், சூரிய பகவானின் பிறந்த நாளை முன்னிட்டு, ரத சப்தமி பல்லக்கு ஊர்வலம்

ஓசூரில், சூரிய பகவானின் பிறந்த நாளை முன்னிட்டு, ரத சப்தமி பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் சுவாமிகளை வைத்து இழுத்து சென்ற பக்தர்கள். 

ரத சப்தமியை முன்னிட்டு, ஓசூரில் M G சாலையில் உள்ள மண்டபத்தில், ஓசூரின் காவல் தெய்வமான மரகதாம்பிகை உடனுறை சந்திர சூடேஸ்வரர் சுவாமிகள், நாமல் பேட்டை உடனுறை பார்வதா தேவி, நஞ்சுருண்டேஸ்வரர் சுவாமிகள் மற்றும் நேதாஜி சாலையில் உள்ள கோதண்ட ராமர், சீதாராம லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. 

தொடர்ந்து இந்த சுவாமிகளை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வண்டிகளில் வைத்து, பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. மரகதாம்பிகை உடனுறை சந்திர சூடேஸ்வரர் சுவாமிகள் சூரிய பிரபை பல்லக்கில் பக்தர்களுக்கு அருள் வழங்கியபடியே முன்னே சென்றார். அதனைத் தொடர்ந்து விநாயகர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளும்  ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டனர். ரத சப்தமி நாள் சூரியனுக்கு சிறப்பு வாய்ந்த நாள். வெயில் தொடங்கிய நாள் என, வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: