Hosur News, ஓசூர் செய்திகள் - Hosur AC Bus - உடனடி தேவை ஏசி பேருந்துகள்!

ஓசூர் விமான நிலையம், ஓசூர் மெட்ரோ ரயில் திட்டம், ஓசூர் ஜோலார்பேட்டை இருப்புப்பாதை திட்டம் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்! எங்களுக்கு உடனடி தேவை ஏசி பேருந்துகள்! தன்னார்வலர்களின் இந்த கோரிக்கையை, உடனடியாக ஏற்று, நடைமுறைக்கு கொண்டு வருமா தமிழ்நாடு அரசு?  ஓசூர் நகர் பகுதி போக்குவரத்தில் ஏசி பேருந்துகள் இயக்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த ஒரு பார்வை! 

ஓசூர் நகர் பகுதி இப்போது சுமார் முப்பது கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் பறந்து விரிந்துள்ளது. ஓசூருக்கும், ஓசூரில் இருந்தும், ஏராளமானவர்கள், நாள் தோறும், பாகலூர்,  வேப்பனப்பள்ளி, சூளகிரி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, தளி, சூசூவாடி என பயணம் மேற்கொள்கின்றனர்.  முறையான சாலை வசதி இருப்பதாலும், சரியான பொது போக்குவரத்து வசதி இல்லாததாலும், பெரும்பாலானவர்கள், தங்களது இருசக்கர அல்லது நான்கு சக்கர தனிப்பட்ட வண்டிகளை பயன்படுத்தி, பயணிக்கின்றனர். 

நான்கு சக்கர வண்டிகளில் ஒருவர் மட்டுமே பயணிப்பதால், பெருமளவு சாலையின் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்வதால், ஓசூரில் சாலைகள், நாளொரு பொழுதும் நெரிசல் மிக்கதாக மாறிக்கொண்டே வருகிறது.  Singe Road என்று இருந்த பல புறநகர் இணைக்கும் சாலைகள், இன்று நான்கு வழி சாலைகளாக மேம்படுத்தப்பட்ட நிலையிலும், போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.  இதற்கு அடிப்படையான காரணம், பொது போக்குவரத்து மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தவில்லை. 

மேலும், நடுத்தர வருவாய் மற்றும் Creamy Layer எனப்படும் உயர் வருவாய் பிரிவினர், அரசு பேருந்துகள் தூய்மையின்றி இருப்பதாலும், கூட்ட நெரிசல் கொண்டதாக இருப்பதாலும், பயன்படுத்துவது இல்லை. 

அதனால் அவர்கள் தனிப்பட்ட நான்கு சக்கர வண்டிகளை பயன்படுத்துவதால், நகரப் பகுதிகளில் போக்குவரத்து ஒரு மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது. ஓசூர் மக்கள் தொகையின் எண்ணிக்கை பெருகி வருவதுடன், சாலை போக்குவரத்து நெரிசலும் பெருகி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கும், மக்களுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதற்கும், அரசு தனியாகவோ அல்லது தனியார் நிறுவனங்களுடனான கூட்டு முயற்சியிலோ, ஏர் கண்டிஷனிங் பேருந்துகளை பொதுப் போக்குவரத்தில் இயக்கப்படுவது, சாலை நெரிசல் கட்டுப்படுத்துவதில் முதன்மையாக திகழும்!.

பெரும் நகரங்கள் மற்றும் மெட்ரோ நகரங்களில் ஏசி பேருந்துகளின் பயன்பாடு வளர்ச்சியடைந்து வருகிறது. பொதுவாக, எரிபொருள் மாசுபாடு, நகரப் போக்குவரத்து நெரிசல், மற்றும் பயணிகள் வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஏசி பேருந்துகள் அடிப்படை பங்கு வகிக்கின்றன. 

பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும்போது, சீரற்ற வெப்பநிலையினால் பயணிகள் துன்பத்திற்கு உள்ளாகின்றனர். இது அவர்களின் உடல் நலத்தையும், மனச்சோர்வையும் அதிகரிக்கலாம். ஆனால், ஏசி பேருந்துகள் சீரான வெப்பநிலையுடன் பயணிக்க வாய்ப்பு கொடுப்பதால் பயணிகள் நிம்மதியாக மற்றும் சுகமாக பயணிக்கலாம்.

உயர்ந்த கட்டணங்கள் கொண்ட ஏசி பேருந்துகளில் பயணிகள் குறைவாக இருப்பதுடன், இருக்கையில் அமர்ந்திருக்க வாய்ப்பு பெருமளவு இருக்கும். இது பயண அனுபவத்தை இனிமையாக்கும்.

பொதுப் போக்குவரத்தில் ஏசி பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படுவதால், தனிப்பட்ட வண்டிகளின் பயன்படுத்தும் எண்ணிக்கை குறையும். இதன் மூலம் சாலை நெரிசல் மற்றும் எரிபொருள் பயன்பாடு குறைய வாய்ப்பு உள்ளது.

இன்றைய பெருநகரங்களில் அடிப்படை இடர்பாடாக காற்று மாசுபாடு உள்ளது. ஒரு பேருந்து, பல தனிநபர் வண்டிகளுக்கு மாற்றாக பயன்படும் போது, மாசுபாடு கணிசமாக குறையும்.

நிறைய வண்டிகள் சாலையில் செல்லும்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், பொதுப் போக்குவரத்திற்கான தேர்வாக ஏசி பேருந்துகள் பயன்படுத்தப்பட்டால், சாலைகளை பயன்படுத்தும் வண்டிகளின் எண்ணிக்கை குறைந்து விபத்துகளின் எண்ணிக்கையும் குறையும்.

தனிப்பட்ட வண்டிகளை பயன்படுத்தும் போது, எரிபொருள் செலவு, பராமரிப்பு செலவு, டோல் கட்டணம் போன்றவை அதிகமாக இருக்கும். ஆனால், ஏசி பேருந்துகளை பயன்படுத்தும்போது பயணச் செலவு குறைந்து, மக்களுக்கு பொருளாதார ரீதியாக நன்மையாக இருக்கும்.

ஏசி பேருந்துகளுக்கு கூடுதல் கட்டணங்களைப் பெற முடியுமாதலால், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். இது மேலும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த உதவும்.

ஏசி பேருந்துகளில் ஆன்லைன் முன்பதிவு வசதி வழங்கினால், பயணிகள் எளிதாக இடங்களை முன்பதிவு செய்து பயணிக்கலாம். ஏசி பேருந்துகளில் இலவச Wi Fi, மொபைல் சார்ஜிங் ஸ்டேஷன் போன்ற வசதிகள் அறிமுகமாகி வருகின்றன. இதனால் பயணிகள் பயண நேரத்தின்போது உற்பத்தியாக செயல்பட முடியும். ஏசி பேருந்துகளில் GPS கண்காணிப்பு அமைப்பு மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்.

இது பொது போக்குவரத்திற்கு எதிர்மறையாக பார்க்கும் மனநிலையை மாற்றி, மக்கள் பெருமளவில் இதைப் பயன்படுத்த வைக்கும். ஓசூர் நகரப் பகுதிகளில், ஏசி பேருந்துகள் அறிமுகப்படுத்துவது, மக்களின் பயண வசதிகளை மேம்படுத்துவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, சாலை நெரிசல் குறைவு, மற்றும் சமூக நன்மைகளை வழங்கும். இது புதிய நகர வாழ்வின் முதன்மையான முன்னேற்றங்களில் ஒன்றாக மற்றும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து இந்த சேவையை விரிவுபடுத்துவதால், ஓசூரில் போக்குவரத்து மிகச் சிறப்பாக வளரும். இதனால், ஏசி பேருந்துகளை பெருமளவில் இயக்கி மக்களுக்கு வசதியாக மாற்றுவதை, தமிழ்நாடு அரசு ஊக்குவிக்க வேண்டும்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: