காதல் என்கிற ஒற்றைச் சொல் அனைவரையும் ஏதோ ஓர் என்ன குவியலில் சேர்க்கிறது! இதில் சில காதலின் எண்ணங்கள் தான் வரலாற்றில் நிற்கிறது. அவ்வாறு ஓர் அற்புதக் காதல் வரலாற்று உண்மை கதை இது! முழுசா ஒரு தடவை கேளுங்க!
ஓசூரை அடுத்த ராயக்கோட்டை பகுதியில் நடந்தேறி உள்ளது ஓர் அற்புதக் காதல் வரலாற்று உண்மை கதை . ராயக்கோட்டை அருகே British ராணுவ படைத் தளபதி, நூற்று என்பது ஆண்டுகளுக்கு முன், தன் காதலி நினைவாக அரேபிய கட்டிடக் கலையில் கட்டிய தமிழ்நாட்டின் தாஜ் மஹால்!
இஸ்லாமிய மன்னர்களின் பிடியில் இருந்த பாகலூர், ஓசூர், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளை British ராணுவம் கைப்பற்றியதால் British ராணுவத்திற்கும், இஸ்லாமிய மக்களுக்கும் நீண்ட பகை உணர்வு இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த ஆயிரத்தி எண்ணூற்று முப்பத்தி ஐந்தாம் ஆண்டு மதராஸ் ரெஜிமெண்டின், ராணுவத் தளபதியாக கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த John Cambell Clive இருந்தார். இவருக்கு திருமணமாகவில்லை.
ஜமாலுதீன் என்பவர் Cambell ன் பாதுகாவலர்களில் ஒருவராக இருந்தார். ராயக்கோட்டையில் மலையின் மேல் Cambell மாளிகை இருந்தது.
அதன் அருகிலேயே ஜமாலுதீன் குடும்பத்தினர் தங்குவதற்கு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இஸ்லாமியரான ஜமாலுதீனுக்கு, மெகருன்னிஷா என்ற மகள் இருந்தார். இவருக்கு திருமணமாகவில்லை.
John கெம்பலுக்கு, மெகருன்னிஷா, மீது காதல் ஏற்பட்டது.
பல முறை John Cambell Clive காதலை ஏற்க மறுத்த மெகருன்னிஷா, ஒரு கட்டத்தில் ஜான் Cambell லின் காதலை ஏற்றுக் கொண்டார்.
இவர்களின் காதலுக்கு, இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
John Cambell Clive, அவ்வப் போது காதலியை தன்னுடைய ஒற்றர் படைத் துணையோடு மறைமுகமாக சந்தித்து வந்தார்.
மெகருன்னிஷாவின் குடும்பத்தாரின் எதிர்ப்பை கடந்து, இருவரும் ராயக்கோட்டை அரண்மனையில், மோதிரத்தை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
தான் விரும்பியவரை மணம் முடித்தாலும், மெகருன்னிஷா, அவரது இஸ்லாமிய மரபு படியே வாழ்ந்து வந்தார்.
கடும் எதிர்ப்பை மீறி நடந்த திருமணத்தால், அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள், பிரிட்டிஷ் ராணுவ தளபதியை திருமணம் செய்து கொண்ட மெகருன்னிஷாவை, தங்களுடைய சமுதாயத்தை விட்டு விலக்கி வைத்தனர்.
புதுமணத் தம்பதிகள் ராயக்கோட்டை அரண்மனையில் இல்லறம் நடத்தினர்.
இணையர்களின் இல்லற வாழ்க்கையில் பிரிவை ஏற்படுத்தும் விதமாக, ஆயிரத்து எண்ணூற்று ஐம்பத்து இரண்டில், இரண்டாம் பர்மா போர் மூண்டது.
போரில் பங்கெடுப்பதற்காக John Cambell அழைக்கப்பட்டார். போரில் பங்கெடுத்த John Cambell, தனது கையை இழந்தார். முகமும் சிதைந்தது.
இந்த நிலையில், போர்க்களத்தில் இருந்து, தனது காதல் மனைவியை தேடி, ராயக்கோட்டை வந்தார்.
கணவனின் நிலையை கண்ட மெகருன்னிஷா, மன உளைச்சல் ஏற்பட்டு, உடல் நிலையில் கடுமையான பாதிப்பிற்கு உள்ளானார்.
மெகருன்னிஷா, நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் இருந்தபோது, ஜான் கெம்பலிடம், தன்னுடைய இஸ்லாமிய மக்களின் கோபத்தைத் தணிக்க, நாம் முதல் முறையாக சந்தித்த இடத்தில், ஓர் ஈத்கா மசூதி அமைக்க வேண்டும். என்றாவது ஒருநாள், என் உறவினர்கள் நம்மை மன்னித்துவிட்டு, அங்கு தொழுகை நடத்த வருவர், என தனது கடைசி ஆசையை கூறிவிட்டு இறந்தார்.
அரேபிய சொல்லான Eid என்றால், தமிழில் திருவிழா என்று பொருள்படுகிறது. இஸ்லாமியர்களுக்கு, ரம்ஜான் மற்றும் பக்ரீத் ஆகியவை முதன்மையான திருவிழாக்கள். Eid கா மசூதி, என்றால், திருவிழா நாளில் தொழுவதற்கான மசூதி என பொருள்.
மனைவி இறந்த துக்கத்தில் இடிந்து போன கேம்பல், ராயக்கோட்டையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில், ஓசூர் சாலையில், தன்னுடைய காதல் மனைவியை முதல் முறையாக சந்தித்த இடத்தில், அவரது நினைவாக ஒரு பிரம்மாண்ட ஈத்கா மசூதி கட்டினார்.
மசூதி அருகே, தன்னுடைய மனைவியின் கல்லறையையும் அமைத்தார். டெல்லியில் இருந்து சிறப்பு கட்டடக் கலைஞர்களை அழைத்து வந்து, அரேபிய கட்டிடக்கலை பாரம்பரியத்துடன் மசூதி மற்றும் கல்லறை கட்டப்பட்டது.
காதல் மனைவி மற்றும் கையை இழந்த John Cambell, ஆயிரத்தி எண்ணூற்று ஐம்பத்தி ஐந்தாம் ஆண்டு, இனி தான், ராயக்கோட்டை பகுதி ராணுவ தளத்திற்கு தலைமை தாங்க விரும்பவில்லை எனக் கூறி, பிரிட்டிஷ் தலைமைக்கு தெரிவித்து விட்டு பணி ஓய்வு பெற்றார்.
ராயக்கோட்டை அருகே, பசுமையான சூழலை கொண்ட பஞ்சப்பள்ளி பகுதியில் John Cambell குடியேறினார். அங்கிருந்து நாள்தோறும், மனைவியின் நினைவிடத்திற்கு நடந்தே வந்து, நேரத்தை கழித்து விட்டு, மீண்டும் பஞ்சப்பள்ளி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தனது கடைசி காலத்தில் ஓசூரை அடுத்துள்ள செக்கேரி ராணுவ பங்களாவில் தங்கியிருந்தார். ஆயிரத்து எண்ணுற்றி எழுபத்தி ஆறில் முதுமையால் காதலின் நினைவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டு இயற்கை எய்தினார்.
காதல் பெருமையும், இரு மத ஒற்றுமையையும் வலியுறுத்தும் இந்த வரலாற்று சிறப்புமிக்க, இந்த சிதிலமடைந்து வரும் நினைவுச் சின்னத்தை, தமிழ்நாடு அரசு, சிறப்பு கவனம் செலுத்தி, சீரமைக்க வேண்டும் என தன்னார்வலர்களும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.