Hosur News, ஓசூர் செய்திகள் - Hosur Crime Report Money making of Hosur Gangsters... சுமார் 30 கொலைகள், 100 கொள்ளை...

ஓசூர் பகுதிகளில், ஆண்டொன்றிற்கு சுமார் 30 கொலைகள்,  100 கொள்ளை நிகழ்வுகள், நூற்றுக்கும் மேற்பட்ட வழிப்பறி குற்றங்கள், என ஏராளமான குற்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது.

இந்தியாவின் பிற பகுதிகளை ஒப்பிடுகையில், ஓசூர் நகர், பொதுமக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு ஏற்ற நகராக, தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பான செயல்பாடுகளால், திகழ்ந்து வருகிறது. 

ஓசூரை பொறுத்தவரை, குற்ற நிகழ்வுகள் குறித்த புகார்கள் காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டால், காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்கிறார்கள்.

ஆனால், அரசியல் தலைவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு நடமாடும் ஓசூர் தாதாக்களால் மிரட்டப்படும் தொழிலதிபர்கள், காவல்துறையின் உதவியை நாடுவது இல்லை.

ஓசூரில் நடைபெறும் வெளிவராத குற்ற செயல்கள் குறித்து, ஓசூர் ஆன்லைனிடம் கருத்துப் பகிர்ந்து கொண்ட தன்னார்வலர் ஒருவர், தனது பேச்சை...

தொழில் அதிபர் வேலைப்பளுவினால், முறையான நேரத்திற்கு வீட்டிற்கு வர இயலாத நிலையில், வீட்டு பணியாள் அல்லது கார் ஓட்டுநர் போன்றவர்களிடம் கள்ளக்காதலில் சிக்கிக் கொள்ளும் தங்களது மனைவியரை மீட்டெடுக்க, ஓசூர் தாதாக்களின் உதவியை நாடும் தொழிலதிபர்கள், கடைசியில் இந்த தாதாக்களுக்கு குடும்பத்துடன் அடிமையாகி போன கதைகளும் ஏராளம் எனக் கூறி எமக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

ஓசூர் நகரின் நடுப்பகுதியில் அமைந்திருக்கும் உணவகம் கூடிய தங்கும் விடுதியில், காவல்துறை என்கிற போர்வையில் சிலரும், தாதாக்கள் அனுப்பியதாக கூறி பலரும், அறைகளை எடுத்து தங்கி விட்டு, உரிமையாளரை மிரட்டி, பணமும் பறித்துச் செல்லும் அவல நிலையில், ஓட்டல் உரிமையாளர்கள், நாளொரு பொழுதும், காவல்துறையிடம் புகார் அளிக்க இயலாத சூழலில், மனம் வெதும்பி வாழ்வதாக அவர் தொடர்ந்தார். 

ஓசூர் ஆன்லைன் சார்பில், ஏன் காவல்துறை உதவியை நாடுவதற்கு இவர்கள் தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பியதற்கு,

தாதா, தமது உணவகத்திற்கு அல்லது தங்கும் விடுதிக்கு வருவது, தமக்கு ஒரு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில், இந்த தொழிலதிபர்கள் பலர், தாதாக்களுடன் நெருங்கிய நட்பில் பழகி விடுகின்றனர் எனக் கூறப்படுகிறது. 

தாதாக்களின் உதவியை, சட்டத்திற்கு புறம்பான முறையில், வேறு ஏதோ ஒன்றுக்காக நாடி, அதனால் பயன் அடைந்ததன் விளைவால், அதே தாதாக்களால் தொழிலதிபர் பாதிக்கப்படும் பொழுது, வெளியில் சொல்ல முடியாமல் திணறி வருகின்றனர் எனக் கூறப்படுகிறது.

தொழிலதிபர்களை பொருத்தவரை, இந்த தாதாக்களுக்கு அரசியல் பின்னணியும் இருப்பதால், தாங்கள் காவல்துறையிடம் புகார் அளித்தால், மேற்கொண்டு பல பாதிப்புகளை இந்த தாதாக்களால் சந்திக்க நேரிடும் என தொழிலதிபர்கள் அச்சம் கொள்வதாக கூறப்படுகிறது.

ஓசூரில் தங்கும் விடுதி மற்றும் உணவகங்கள் நடத்தும் தொழிலதிபர்களை, அதிலும் குறிப்பாக, காந்தி சிலை, பாகலூர் சாலை போன்ற நகரின் நடுப்பகுதியில், விடுதிகள் நடத்துபவர்களை, மிரட்டி பணம் பறிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அதன் பின், மாதம்தோறும் இந்த தாதாக்களுக்கு கப்பம் கட்டும் நிலைக்குத் மிரட்டப்படுகிறார்கள்.  

மேலும், தாதாக்கள் கைகாட்டும் அனைவருக்கும் விடுதியில் அறை வழங்குவது, தாதாவின் பெயர் சொல்லிக் கொண்டு, உணவு உட்கொண்டால் பணம் வாங்காமல் அனுப்புவது போன்ற அடிமை நிலைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். 

சார்ட்டட் அக்கவுண்டன் ஆடிட்டர்கள், சிறப்பு மருத்துவர்கள் என, உயர்கல்வி பயின்ற யார் யாரெல்லாம், சட்டத்திற்கு புறம்பானது என தெரிந்தும், இந்த தாதாக்களின் உதவியை நாடினார்களோ, அவர்களை எல்லாம், தங்களது கட்டுப்பாட்டில் வைத்து, மாதம் தோறும் மிரட்டி பெருந்தொகையை கப்பமாக வசூல் செய்து வருகின்றனர், என இது குறித்து ஓசூர் ஆன்லைனிடம் தெரிவித்தார். 

இது ஒரு புறம் இருக்க,  ஓசூர் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் சிலரும், சாலையோர உணவகங்கள், சிறு, குறு வியாபாரிகள், போன்றவர்களை மிரட்டி, நாள்தோறும் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.  ஓசூர் மாநகராட்சி சார்பில், யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என பலமுறை அறிவிப்பு வெளியிட்டும், இந்த நிலை தொடர்வதாகவே, பாதிப்படைபவர்கள் தெரிவிக்கின்றனர். 

ஓசூர் சுற்றுவட்டார பகுதியில், 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்பு விற்கப்பட்ட விளைநிலங்கள் அல்லது வீட்டுமனைகளை உரிமை கோரி, அதற்கு, வலது, இடது, நடு, என ஏதாவது ஒரு அரசியல் சாயம் பூசிக்கொண்டு, பணம் பறிக்கும் செயல்களில், பலர் ஈடுபட்டு வருகின்றனர் என கூறப்படுகிறது. 

இத்தகைய குற்ற நிகழ்வுகள் ஓசூர் பகுதியில் தொடர்ந்தாலும், பெரும்பாலானவை காவல்துறையிடம் முறையான வகையில் புகாராக கொடுக்கப்படுவது இல்லை.  இதற்கு அடிப்படையாக அமைவது, குற்றவாளிகளை கண்டு பாதிப்படைந்தவர்கள் துணிவு கொள்ளாமல் இருப்பதே!.  

காவல் துறையினர், அறிவிப்பு பதாகைகளை நிறுவி, பாதிப்படைந்தவர்களை துணிச்சலுடன் புகார் அளிக்கும்படி ஊக்குவிக்க வேண்டும்.  

அப்படி, அறிவிப்புகளை காவல்துறை மேற்கொண்டால், ஓசூர் தாதாக்களால் பாதிப்புக்கு உள்ளானவர்கள், துணியுடன் காவல் துறையின் உதவியை நாடுவர்.  காவல்துறையின் கடும் நடவடிக்கையின் மூலம், தாதாக்களின் அடாவடி கட்டுக்குள் வரும், என்று கூறினார்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: