ஓசூர் விமான நிலையம் அமைப்பது குறித்து, Airport Authority of India, தனது ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த ஆய்வறிக்கையில், தமிழக அரசு முன்மொழிந்த, சூளகிரி அடுத்த, உலகம் ஊர் அருகே உள்ள பகுதி மற்றும் Taneja Aerospace and Aviation Limited அமைந்துள்ள பகுதி ஆகிய இரண்டு பகுதிகளும், ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கு சிறந்தவை என சுட்டிக்காட்டி உள்ளது.
ஓசூர் விமான நிலையம் அமைப்பதன் முதற்கட்டமாக, Airport Authority of India, தனது வரைவு ஆய்வு அறிக்கையை, தமிழ்நாடு அரசிடம் வழங்கியுள்ளது. இது ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கான முதல் படி என, விமான நிலையங்கள் அமைப்பது தொடர்பாக நன்கறிந்தவர்கள், ஓசூர் ஆன்லைன் இடம் கூறுகிறார்கள்.
அடுத்ததாக, Obstacle Limitation Surface Survey, அதாவது, தடை வரம்பு மேற்பரப்பு மதிப்பாய்வு மற்றும் வான்வெளி - Air Space, குறித்த முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் திங்களில், தமிழ்நாடு அரசு, ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கு, ஐந்து இடங்களை அடையாளப்படுத்தியது. அதில் இரண்டு இடங்கள், Airport Authority of India ஆய்விற்கு முன்மொழியப்பட்டது. Taneja Aerospace and Aviation Limited அமைந்துள்ள பகுதி முதன்மையான தேர்வாகவும், இரண்டாவது தேர்வாக, சூளகிரி - ராயக்கோட்டை இடையே அமைந்துள்ள, உலகம் அருகே அமைந்துள்ள பகுதி. உலகம் பகுதி, ஓசூருக்கு கிழக்கில், Taneja Aerospace அமைந்துள்ள பகுதியில் இருந்து, சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
ஆய்வறிக்கை குழுவின் நன்கறிந்த வட்டாரத்தில் ஒருவர், ஆய்வு அறிக்கை குறித்து, ஓசூர் ஆன்லைனிடம், தமிழ்நாடு அரசு முன்மொழிந்த இரண்டு இடங்களும், ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கு ஏற்புடைய இடங்கள் என கருத்து தெரிவித்தார்.
மேலும் கூறிய அவர், இந்த ஆய்வறிக்கை, முதற்கட்டமானது மட்டுமே. தடை வரம்பு மேற்பரப்பு மதிப்பாய்வு மற்றும் வான்வெளி குறித்த ஆய்வு, வரும் ஏப்ரல் திங்களுக்குள் நிறைவடைந்து, தமிழ்நாடு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும், என்றார்.
ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கு பெரும் தடையாக அமைந்துள்ளது, ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கும், Bangalore International Airport Limited, இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள, 150 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்திற்கு, வேறு விமான நிலையங்கள் அமைப்பது இல்லை என்கிற ஒப்பந்தம்.
தமிழ்நாடு அரசு, பெங்களூர் விமான நிலையத்திடம், ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கு, தடையின்மை சான்றிதழ் பெற்றால் மட்டுமே, அடுத்த கட்டத்திற்கு, பணிகள் தொடரும் என, தகவல்களை பகிர்ந்தார்.
தமிழ்நாடு அரசை பொருத்தவரை, 2000 ஏக்கர் பரப்பளவில், இரண்டு ஓடு பாதைகள் கொண்ட விமான நிலையம், ஓசூரில் அமைப்பதில், முழு ஆர்வமும், தொடர்ந்து தீவிரமும் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ஓசூர் விமான நிலையம் அமைப்பது குறித்து, நாடாளுமன்றத்தில் பேசிய விமான போக்குவரத்து துறை அமைச்சர், கிஞ்சராபு ராம் மோகன், ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு, ஆகிய இரண்டு அரசுகளும் ஒன்றாக அமர்ந்து, பெங்களூரு விமான நிலைய ஆளுமை குழுவிடம், கலந்து பேசி, ஏற்புடைய தீர்வை பெற வேண்டும் என குறிப்பிட்டார்.
கடந்த நாள், நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், மாநிலங்களவை உறுப்பினர் ஆர் தர்மர், ஓசூர் விமான நிலையம் குறித்து, கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்த, ஒன்றிய விமானத்துறை துணை அமைச்சர் முரளிதர் மொஹோல், தமிழ்நாடு அரசு சார்பில், ஓசூரில் பசுமை விமான நிலையம் அமைப்பது குறித்து, எவ்வித கோரிக்கையும், ஒன்றிய விமானத்துறை அமைச்சகத்திற்கு வரவில்லை என்று தெரிவித்தார்.