Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் காவல்துறையை பாராட்டும் பொதுமக்கள்! ஏன்? எதற்கு?

ஓசூர் காவல்துறையை பாராட்டும் பொதுமக்கள்!  ஏன்? எதற்கு?  ஓசூர் காவல்துறை கடந்த சில நாட்களில் நிகழ்த்திய சாதனை தான் என்ன?  அனைத்து தரப்பு மக்களும் ஓசூர் காவல் துறையை பாராட்டுவதன் பின்னணி குறித்து தெரிந்து கொள்ளலாம்! 

ஓசூர் மலைக்கோவில் என்று அழைக்கப்படும் சந்திர சுடேஸ்வரர் உடனுறை மரகதாம்பாள் திருக்கோவிலின் ஆண்டு விழாவை முன்னிட்டு, துவக்க நிகழ்வாக, கடந்த பிப்ரவரி திங்கள், பத்தாம் நாள், தேர் பேட்டை பகுதியில், பால் கம்பம் நடுவிழா மற்றும் தேர் கட்டும் பணிகள் துவக்க விழா நடைபெற்றது. 

அதை தொடர்ந்து பல்வேறு திருவிழா கொண்டாட்டங்கள் ஓசூரில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.  ஓசூர் தேர்த்திருவிழாவின் முதன்மையான கொண்டாட்டமான, தேரோட்டம், கடந்த வெள்ளிக்கிழமை, மார்ச் பதினாலாம் நாள் நடைபெற்றது.  ஓசூர் மட்டுமல்லாது, தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களான, கருநாடகா மற்றும் ஆந்திரா பகுதிகளில் இருந்தும் இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.  

அடுத்த நாள், காரிக் கிழமை, மாலை ராவண எழுந்தருளல் தேரோட்டமும், சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றது.   இதிலும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். 

ஞாயிற்றுக்கிழமை மாலை, தெப்ப திருவிழா நடைபெற்று, இந்த ஆண்டின் மலைக்கோவில் திருவிழா கொண்டாட்டங்கள் நிறைவுற்றன. 

லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த நிகழ்வுகளில், குற்ற நிகழ்வுகள் எதுவும் நடக்கா வண்ணம், ஓசூர் காவல் துறையினர் சிறப்புடன் திட்டமிட்டு பணியாற்றி, பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளனர். 

சுமார் 250 காவலர்களைக் கொண்ட காவலர்  படை, 150 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் கண்காணிப்பு, மேலும், சிறப்பான உழவுப்பிரிவு தகவல்கள், என அனைத்தும் ஒருங்கிணைத்து, ஓசூர் காவல் துறையினர், ஒரு Pick Pocket உள்ளிட்ட சிறு  குற்ற நிகழ்வு கூட இல்லாத அளவிற்கு கட்டுக்கோப்பாக, இரவு பகல் பாராது உழைத்து, பொதுமக்களுக்கும், பொதுமக்களின் உடைமைகளுக்கும், பாதுகாப்பு வழங்கி, திருவிழாவை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் சிறப்பித்துள்ளனர்.

ஓசூர் பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஓசூர் ஆன்லைன் சார்பில், நமது ஓசூர் காவல்துறையினருக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: