Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூரில் உலகளாவிய திறன் பெருவழிச்சாலை, Global Capability Corridor என்றால் என்ன?

ஓசூரில் உலகளாவிய திறன் பெருவழிச்சாலை, பெங்களூருவிற்கு சவாலாகவும், தமிழ்நாடு பொறியியல் மற்றும் அறிவியல் பயின்ற இளைஞர்களுக்கு உயர் வருவாய் வேலை வாய்ப்பு வழங்கும் தளமாகவும் அமையுமா?  உலகளாவிய திறன் பெருவழிச்சாலை, Global Capability Corridor  என்றால் என்ன?

சிறப்பான கல்விக் கொள்கை மற்றும் அரசின் திட்டங்களின் பயனாக, ஏராளமான அறிவுசார் பயிற்சி பெற்ற இளைய சமூகத்தினரை பெருமளவில் கொண்டது தமிழ் நாடு. 

தமிழ்நாடு அரசு, பெங்களூருவின் Electronic City இணையாக, ஓசூரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் திட்டத்தை அறிவித்திருப்பது, தமிழ்நாட்டில் உயர் கல்வி கற்கும் இளைஞர்களின் ஆர்வத்தை மேலும் உயர்த்தும்.  

நிதிநிலை அறிக்கையில், இதற்காக சுமார் 400 கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.  சுமார் ஐந்து லட்சம் சதுர அடி பரப்பளவில் உயர் தொழில் நுட்ப வாய்ப்புகள் கூடிய தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கான திட்டமும், வெளியிடப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டின் மனித வளம் மேலும் மேம்படும். 

செயற்கை நுண்ணறிவு மற்றும் உயர தொழில்நுட்பத்தின் பயன்கள், ஏற்கனவே ஓசூரில் கோலோச்சி வளர்ந்துள்ள கனரக தொழிற்சாலையை, உலகளாவிய அளவிற்கு தரம் உயர்த்தும். 

Global Capability Corridor, உலகளாவிய திறன் பெருவழிச்சாலை என்றால் என்ன?  உலகளாவிய திறன் பெருவழிச்சாலை என்பது, பல்வேறு நாடுகள் மற்றும் தொழில்துறைகளை இணைக்கும் ஒரு நீண்டகால பங்குதாரர் கூட்டு முயற்சியாகும். 

இது திறன் மேம்பாடு, தொழில்நுட்ப பரிமாற்றம், மற்றும் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்ற உதவும் ஒரு தளமாக செயல்படுகிறது. குறிப்பாக, முன்னணி தொழில்நுட்பத் துறைகள், திறமையான மனித வளம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, R and D, மற்றும் மொத்தமாக ஒரு நாட்டின் தொழில் வலுவை பெருக்கும் முயற்சிகள் இதில் அடங்கும்.

ஓசூரில் உலகளாவிய திறன் பெருவழிச்சாலை அமைவதால், திறமையான பணியாளர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். புதிய நிறுவனங்கள் தோன்ற மற்றும் உள்ள நிறுவனங்கள் விரிவடைய வழிவகுக்கும்.  உலகளாவிய அளவில் பொருளாதார மற்றும் தொழில் முன்னேற்றத்தை அடைய உதவும்.

உயர் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி பயின்ற இளைஞர்கள், உயர்  வருவாய் கொண்ட வேலைகளை . தேடி, வெளிநாடு அல்லது அண்டை மாநிலங்களில் புலம் பெயர்ந்து வருவதும், தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்க்கை முறையில் ஒன்றாகி விட்டது. 

திறன் பெருவழிச்சாலை அமைத்தால்,  லட்சக்கணக்கான தமிழ்நாட்டில் உயர்கல்வி பயின்ற இளைஞர்கள் பயன் பெறுவார்கள். 

ஏற்கனவே ஓசூரில், rolls royce நிறுவனம், தனது ஆராய்ச்சி மற்றும் புதிய பொருள் வடிவமைப்பு நடுவத்தை அமைத்துள்ளது. 

Jaguar நிறுவனம் அத்தகைய ஒரு நடுவத்தை, ஓசூர் அடுத்துள்ள ராணிப்பேட்டையில் அமைத்துள்ளது. 

ஓசூரில் B M W, Delta Electronics, Ascent Circuits மற்றும் பிற தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள், ஏராளமாக அமைந்துள்ளன.

ஏற்கனவே, தமிழ் நாடு, ஒட்டுமொத்த இந்தியாவின் மின்னணுவியல் தொழில்நுட்பம் சார்ந்த ஏற்றுமதியில், சுமார் 33 விழுக்காட்டை தன்னகத்தே கொண்டுள்ளது.  கடந்த ஆண்டு, ஒன்பதரை பில்லியன் அமெரிக்க டாலருக்கு இணையான ஏற்றுமதியை, தமிழ் நாடு, உலகம் முழுவதற்கும் ஏற்றுமதி செய்துள்ளது.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: