Hosur News, ஓசூர் செய்திகள் - ஹூடா வந்தால், அனுமதியற்ற கட்டிடங்கள் இடிக்கப்படுமா?

ஓசூருக்கு வருகிறது ஹூடா! ஹூடா வந்தால், அனுமதியற்ற கட்டிடங்கள் இடிக்கப்படுமா? ஓசூரில் வளர்ச்சி, மேலும் திறன் பட, ஹூடா வழி வகுக்குமா? ஹூடா என்றால் என்ன? ஹூடாவால் என்ன பயன்? போன்ற தகவல்களை பார்க்கலாம்!

ஹூடா என்றால் H U D A, அதாவது, Hosur Urban Development Authority. தமிழில், ஓசூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணையம்.   இது ஓசூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளின், நகர்ப்புற வளர்ச்சிக்கான திட்டமிடுவதற்கும், ஒழுங்குமுறை படுத்துவதற்கும், உயர் பொறுப்பு மிக்க ஒரு அரசு நிறுவனமாகும். 

ஏற்கனவே, ஓசூர் நகர் வளர்ச்சிக்காக பணியாற்றி வரும் H N T D A, ஓசூர் புது நகர் வளர்ச்சி ஆணையம், என்ற அமைப்பை, மேற்கொண்டு தனக்கான முழு வல்லமை படைத்த அமைப்பாக மாற்றி அமைக்கப்படுவதே, ஹூடா என்கிற, அரசு நிறுவனம். 

இதன் அடிப்படை பணி, நில பயன்பாட்டு மேலாண்மை, கட்டிடங்கள் மற்றும் கட்டுமானங்களுக்கான அனுமதி வழங்குவது, ஓசூர் வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வையை கொண்டு திட்டம் வகுப்பது, என்பன உள்ளிட்டவையாக இருக்கும். 

இப்போது,  சென்னைக்கு மட்டுமே, C M D A சென்னை பெருநகர் வளர்ச்சி ஆணையம் என்ற முழு வல்லமை படைத்த அமைப்பு உள்ளது.  இது நாள் வரை, ஓசூர் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கான நில அனுமதிகளை, D T C P Directorate of Town and Country Planning, நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்ட இயக்குநரகம் வழங்கி வந்தது. 

மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் எஸ். முத்துசாமி, D T C P திட்டமிடல் ஒப்புதல்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும், போக்குவரத்து மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கான பெருந்திட்டம் போன்ற துறைகளுக்கு தகுதி வாய்ந்த திட்டமிடுபவர்கள் இத்துறையில் இல்லை என்று சட்டசபையில் தெரிவித்தார்.

தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சிக்கான முழு வல்லமையும்,  D T C P என்கிற ஒற்றை தலைமையின் கீழ் குவிந்து கிடந்தது.  இதை மாற்றியமைக்கும் விதமாக, நகர்ப்புற வளர்ச்சியை, மேம்படச் செய்யும் வண்ணம், ஓசூர், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் C M D A போன்ற முழு வல்லமை பொருந்திய நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் அமைப்பதற்கான திட்டம், 2021 ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், வெளியிடப்பட்டிருந்தது. 

தேவைகளை கருத்தில் கொண்டு, இந்த நான்கு பெரு நகரங்களின் பட்டியலுடன், திருச்சி மற்றும் சேலம் இணைக்கப்பட்டு, நகர்புற வளர்ச்சி ஆணையம் அமைப்பதற்கான முனைப்புகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 

இத்தகைய அமைப்பு இந்த நகரங்களில் அமையப்பெற்றால், வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இந்த நகரங்களின் வளர்ச்சி திட்ட தேவைகளும், அனுமதிகளும், ஒவ்வொரு நகரத்தின் சூழலுக்கும் ஏற்றார் போல் திட்டமிட்டு, விரைவான முடிவுகள் எடுக்கப்படும். 

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: