ஓசூர் உழவர்கள், water apple அல்லது பன்னீர் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பழ சாகுபடியில், வெள்ளை, பச்சை, இளஞ்சவப்பு, மஞ்சள் ஆகிய நான்கு நிறங்களில் சாகுபடி செய்து சாதனை படைத்து வருகின்றனர்.
பெங்களூருவில் இருந்து Thug Life திரைப்படம் காண்பதற்காக ஓசூரில் குவிந்த கமல் ரசிகர்கள்.
சூளகிரி ஒன்றியம் பி எஸ் திம்மச்சந்திரன் ஊராட்சிக்குட்பட்ட சித்தலன்தொட்டி ஊரில் 50 ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாத நிலையில் கடந்த நாள் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் அரசு நகர் பேருந்து சேவையை துவங்கி வைத்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாங்காய் ஏற்றி வந்த சரக்குந்து, சூளகிரி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிகழ்வில், மேலும் இருவர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது
.
கிருஷ்ணகிரி மாவட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக பணியாற்றியதற்காக, பசுமை விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த நாள் சென்னை வர்த்தக நடுவத்தில், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் நடைபெற்ற, உலக சுற்றுச்சூழல் நாள் விழாவில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முதலமைச்சரிடம் இருந்து விருதை பெற்றுக் கொண்டார்.
சூளகிரி அருகே, fancy பொருட்கள் விற்கும் கடை நடத்தி வந்த கடை உரிமையாளர், பொதுமக்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்படும் மோதல்களை தவிர்ப்பதற்கான பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என கடந்த நாள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
சுற்றுச்சூழல் குறித்து தன்னார்வம் கொண்ட ஏராளமான இளைஞர்கள், ஏரிக்கரை ஓரங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும், மரக்கன்றுகள் நட்டு, உலக சுற்றுச்சூழல் நாளை சிறப்பித்தனர்.