Hosur Daily Podcast – Weather, Panchangam, Astrology & News | 07 June 2025
Hosur’s daily podcast with weather, panchangam, astrology, and top news. Updated every morning by 5 AM. Stay informed with HosurOnline.
🌤️ Hosur Weather Update – Temperature, wind, rain possibilities.
📿 Hosur Panchangam – Tamil calendar highlights for the day.
🌟 Daily Astrology – Zodiac predictions & rasi palan.
📰 Top Hosur News – A quick roundup of today’s local headlines.
🎧 Listen now and stay updated with what matters in and around Hosur.
🗓️ Episode Date: 04 June 2025
📍 Language: Tamil
Share this podcast with friends & family in Hosur – let’s stay informed together!
Follow us on https://youtube.com/@hosuronline and https://creators.spotify.com/pod/show/hosuronline for daily updates.
பசுமை கிருஷ்ணகிரி மாவட்டம் திட்டத்தின் கீழ், ஒரு கோடி மரக்கன்றுகள் மாவட்டம் முழுவதும் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஓசூர் சட்டமன்ற உறுப்பினர், மரம் நட்டு ஓசூரில் திட்டத்தை துவக்கி வைத்தார்.
ஓசூர் அடுத்த நாகண்டபள்ளியில், தேவி கரகதாம்பா கோவில் ஊர் திருவிழா கடந்த நாள் நடைபெற்றது.
தளி அருகே, தாசையன் மடுவு எனும் ஊரில், அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி இருளர் பழங்குடியினர் அவதி. கழிவறை மற்றும் பொது வசதிகள் அமைத்து தர கோரிக்கை.
மாணவர்கள் படிக்கும் போதே தொழில் பயிற்சி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என, ஓசூரில், சிப்காட் செயல் இயக்குனர் சினேகா கூறினார்.
தளி சாலை, T V S நகர் எதிர்ப்புறம் உள்ளது எல்லாம்மாதேவி கைலாசநாதர் கோவில். இன்று ஜூன் ஏழாம் நாள், குடமுழுக்கு விழா இந்து அறநிலைத்துறை சார்பில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அப்பகுதியை சார்ந்த ஜாதிய மற்றும் அரசியல் அமைப்புகள், குடமுழுக்கு விழாவை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கூறி, கடந்த நாள், சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தேன்கனிக்கோட்டை அருகே, வேதிப் பொருள் கொண்டு கழுவினால், பணமாக மாறும் என கூறி கருப்பு நிற காகிதங்கள் கொடுத்த்து, பெண்ணிடம் ரூபாய் நாற்பதாயிரம் மோசடி செய்த பூசாரி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
சூளகிரியில் 108 ஆம்புலன்ஸ் பழுதானதால், மாற்று ஏற்பாடு செய்வதற்கு ஒன்றரை மணி நேரம் எடுத்துக் கொண்டதைத் தொடர்ந்து, பாதிப்படைந்தவர்கள் மருத்துவமனை மருத்துவரிடம் வாய் சண்டையில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை அருகே, மாந்தோப்பில் புகுந்த யானைகள், தோட்டத்தை வீணடித்துச் சென்றன. விளை பொருள் உற்பத்தியாளர்கள் வேதனை.
தேன்கனிக்கோட்டை அருகே ஆலகல்லி ஏரியிலிருந்து மணியம்பாடி செல்லும் சாலையில் சிறுத்தை நடமாடியதை அப்பகுதியில் பயணித்தவர்கள் புகைப்படம் எடுத்தனர்.
சிபில் குறியீடு பார்த்து பார்த்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் பயிர் கடன் கொடுக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் சுற்றறிக்கையை திரும்ப பெற தேன்கனிக்கோட்டை பகுதி, தமிழக விவசாய பாதுகாப்பு சங்கம் கோரிக்கை.
சூசூவாடி அரசு பள்ளிக்கு, இரண்டு வகுப்பறைகள் கட்டிக் கொடுத்த குளோபல் கால்சியம் நிறுவனம்.