“ஏராளமான தொழிற்சாலைகள், குறுக்கும் நெடுக்குமாக செல்லும் அகண்ட மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள், பெருநகரங்களை இணைக்கும் இரட்டை வழி இருப்புப் பாதை, விரைவில் வர இருக்கும் விமான நிலையம்... இவை எல்லாம் ஒன்று சேர்ந்து, ஓசூரை தமிழ் நாட்டின் அடுத்த பெரிய நகரமாக மாற்றி வருகிறது.”
நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய தொழில் முதலீடுகளைக் கொண்ட தொழிற்சாலைகள் ஓசூரின் அனைத்து திசைகளிலும் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக, lakshmi automatic loom works limited, Titan Industries, T V S Motors, Leyland, Nerolac Paints, Exide Industries, Tata Electronics, Astrol Pipes, ஓலா, ஏத்தர், Carborundum Universal Limited குமி, Microlabs, டெல்மான்டே, Delta, ஏராளமான கிரானைட் மற்றும் மார்பில் தொழிற்சாலைகள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
விளைபொருள் உற்பத்தியில், ஏற்றுமதி தரத்தில் மாம்பழம் மற்றும் மாம்பழக்கூழ், ஏற்றுமதி மலர் உற்பத்தி, பல்வேறு நிறங்களில் ஏற்றுமதி குடைமிளகாய் உற்பத்தி, Hydrophonics மற்றும் Aerophonics முறையில் காய்கறி உற்பத்தி, காளான் உற்பத்தி என பல்வேறு துறை சார்ந்த தொழிற்சாலைகள் சிறந்தோங்கி இயங்குகின்றன.
ஓசூரில், நான்கு சிப்காட் தொழிற்சாலை வளாகங்கள் அமைந்துள்ளது. ஏற்றுமதி தொழிற்சாலைகளுக்கென்று, சிறப்பு ஏற்றுமதி மண்டலம், உலகளாவிய திறன் வளாகம், பல்வேறு சிட்கோ தொழிற்பேட்டைகள் என தொழிற்சாலைகளுக்கான வளாகம் எண்ணிலடங்காதவை. இவை ஏராளமான வேலை வாய்ப்பை, உயர்கல்வி கற்றவர்கள் முதல் கல்வியறிவு அற்றவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் வழங்கி வருகிறது.
ஓசூரின் உள் கட்டுமானங்கள் என்று எடுத்துக் கொண்டால், ஏராளமான சாலை வசதிகளை கொண்டது ஓசூர். இந்தியாவின் நீண்ட மற்றும் முதன்மையான தேசிய நெடுஞ்சாலை 44, ஓசூரை கடந்து செல்கிறது. இந்த நெடுஞ்சாலை, ஆசிய கண்டத்தில் உள்ள பிற நாடுகளையும் இணைப்பதால், இதற்கு Asian Highway Fourty Three என்ற எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 844, 207, STRR 948 A, என அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஓசூர் தேன்கனிக்கோட்டை, ஓசூர் - அத்திப்பள்ளி, கெலமங்கலம் வழி ராயக்கோட்டை, உள்வட்டச் சாலை, வெளிவட்டச் சாலை, ஓசூர் பீர்ஜேபள்ளி சாலை, என சாலை வசதிகள் ஏராளம். திட்டமிடப்பட்டுள்ள விமான நிலையம், இரட்டை வழித்தட இருப்புப் பாதை, என சிறந்த போக்குவரத்து இணைப்பு கொண்டது ஓசூர்.
பாதாள சாக்கடை திட்டம், காவேரி கூட்டு குடிநீர் திட்டம், தடையற்ற மின் வழங்கல், தரமான குடியிருப்பு பகுதி சாலைகள், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலை, என அடிப்படை கட்டமைப்புகளைக் கொண்டது ஓசூர்.
மருத்துவக் கல்லூரி, கால்நடைதுறை கல்லூரி, வேளாண் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், அறிவியல் மற்றும் கலை கல்லூரி, இசைக்கல்லூரி என ஏராளமான கல்வி நிறுவனங்கள் ஓசூரில் நிறைந்துள்ளன. பள்ளிக்கூடங்களை பொறுத்தவரை, அனைத்து பாடத்திட்டங்களிலும், பள்ளிகள் இயங்குகின்றன.
இத்தகைய வளர்ச்சிமிகு ஓசூரில், முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு, ஏராளமான வகைகளில் வாய்ப்புகள் உள்ளன. நாம் இந்த காணொளியில் ரியல் எஸ்டேட் முதலீடுகள் குறித்து பார்க்கிறோம். ஓசூர் ரியல் எஸ்டேட் முதலீட்டு வகைகளில் முதலாவதாக கருதப்படுவது, தனியார் தொழிற்பேட்டை வளாகம், இயற்கை சூழல் நிறைந்த பகுதிகளில் பெரு நிறுவன ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டு நடுவங்கள், விளை பொருள் உற்பத்தி நிலங்கள், வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், போன்றவை, முதலீட்டாளரே நிலங்களை மேம்படுத்தி, நிரந்தர வருவாய் பெற தக்க வகையில் அமைத்துக் கொள்வது.
இரண்டாவது முதலீட்டு வகை, நிலங்களை மேம்படுத்தி விற்பது. இதில், குடியிருப்பு பகுதிகள் மற்றும் தொழிற்பேட்டைகள் அடங்கும். இந்தத் துறையில், கடுமையான போட்டிகள் இருப்பினும், வாங்குவதற்கு ஏராளமானவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
மூன்றாவது முதலீட்டு வகை, தனிநபர் அளவிலான சிறிய முதலீடுகள். இவை பெரும்பாலும் வணிக வளாகங்களில் கடை அல்லது குடியிருப்பு வீடு ஆகியவற்றில் முதலீடு செய்வது.
ஓசூர் ரியல் எஸ்டேட் முதலீடு வளர்ச்சியை பொருத்தவரை, பாகலூர் மற்றும் சூளகிரி ஆகிய பகுதிகள் முதன்மை வகிக்கின்றன. நல்லூர் சாலை, ராயக்கோட்டை சாலை, தளி சாலை ஆகியவை குடியிருப்பு பகுதி முதலீடுகளுக்கு சிறந்தவையாக விளங்குகிறது. நீண்ட நாள் முதலீடுகளுக்கு, தேன்கனிக்கோட்டை சாலை, கெலமங்கலம் சாலை ஆகியவை சிறந்தவையாக கருதப்படுகிறது.
முதலீடு செய்வதற்கு முன், சிறந்த சட்ட ஆலோசனை பெற்று ஈடுபடுங்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் நீங்கள் ஏமாற்றப்படலாம். திடீர் திடீரென நீதிமன்ற வழக்குகள் தொடுக்கப்படுவதும் ஓசூரில் இப்போது வாடிக்கையாகி உள்ளது என்பதை நினைவில் கொள்க. மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறோம், எச்சரிக்கையான அணுகுமுறையை, ஓசூர் ரியல் எஸ்டேட் முதலீடுகளில் நீங்கள் மேற்கொண்டால். உங்கள் முதலீடு பாதுகாப்பானதாகவும், கட்டுக்கடங்கா வளர்ச்சியை கொண்டதாகவும் இருக்கும்.
“ஓசூரின் இந்த வளர்ச்சி இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடரும். முதலீடு செய்யும் நேரம் இது தான்!” “The time to invest in Hosur is NOW — when growth meets opportunity.”