500 கோடி முதலீட்டில், ஓசூரில் ஜெர்மனை சேர்ந்த Festo நிறுவனம் தொழிற்சாலையை கடந்த நாள் துவங்கியது. இத்தொழிற்சாலையில், தானியங்கி பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் என தகவல்.
மதுவிலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜெய் சிங் ஜான் தலைமையில், ஓசூர் ஆய்வாளர் ஷர்மிளா பானு மற்றும் நுண்ணறிவு பிரிவு காவலர்கள் உள்ளிட்ட குழுவினர், எம் ஜி சாலையில் உள்ள மருந்து பொருள் விற்பனை கடையில், எரிசாராயம் போன்ற பொருட்கள் முறையாக மருத்துவமனைகளுக்கு மட்டும்தான் விற்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடத்துனர் இல்லாமல் பேருந்து ஓட்டிய பேருந்து ஓட்டுனர் குறித்த செய்தி வெளியானது. இந்நிலையில் கடந்த நாள், பயண சீட்டு வழங்காமல், பணத்தை மட்டும் பெற்றுக் கொண்ட நடத்துனருக்கும் பயணிகளுக்கும் வாய் தகராறு, பேருந்து நிலையத்தில் ஏற்பட்டது, காண்போரை அதிர்ச்சி அடைய செய்தது.
ஓசூர் பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு, எழுது பொருட்கள் வழங்கி அப்பள்ளியின் ஆசிரியர்கள் மகிழ்வித்தனர்.
சூளகிரி தி மு க தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் தி மு க வில் இணைந்தனர்.
அதிமுக துணை பொதுச்செயலாளரும் வேப்பனப்பள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே பி முனுசாமி 74 ஆவது பிறந்தநாளை ஒட்டி, சூளகிரி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 74 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். அன்னதானம் மற்றும் தென்னை மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சூளழகிரி ஒன்றிய செயலாளர் பாபு வெங்கடாசலம், எஸ் வி எஸ் மாதேஷ், சூளகிரி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் எல் செல்வம் மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் செய்திருந்தனர்.
ஓசூர் அடுத்த திம்மசமுத்திரம் பகுதியில் மின்வடங்கள் மற்றும் மின் மோட்டார்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவதாக புகார்.
ஓசூர் நகர் பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வரும் செப்டம்பர் ஒன்றாம் நாள் முதல் A T M களில் 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படாது என தகவல். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால், 500 ரூபாய் நோட்டு செல்லாதா என மக்கள் குழப்பம்.