ஓசூர் தளி சாலையில், டி வி எஸ் நகர் எதிரே அமைந்துள்ள எல்லம்மாதேவி, கைலாசநாதர் திருக்கோவில் குடமுழுக்கு விழா சிறப்புடன் நடைபெற்றது. இக்கோவிலின் அறங்காவலர் சென்னீரப்பா, குடமுழக்கு விழாவை முன்னின்று நடத்தினார். ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட தலைவர்கள் விழாவில் பங்கெடுத்தனர்.
ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், இஸ்லாமியர்கள், பக்ரீத் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.
ஓசூர் அருகே, நாகொண்டபள்ளியில் மூன்று வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள். பொதுமக்கள் அதிர்ச்சி.
ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், பெங்களூருவில் இருந்து கும்பல் கும்பலாக, பெருமளவு ஓசை எழுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட, விலை உயர்ந்த இருசக்கர வண்டிகளில், ஏராளமானவர்கள் பைக் ரேஸ் ஈடுபடுவதால், சாலையை பயன்படுத்தும் பயணிகள் அச்சம். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்.
ஓசூர் அடுத்த புக்கசாகரம் ஊரில், என் டி ஆர் பள்ளியின் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
ஓசூர் தேன்கனிகோட்டை இடையிலான வழித்தடம் எண் 46 கொண்ட பேருந்தில், இரவு நேரத்தில் விளக்குகள் எரியவில்லை எனவும், கைபேசி டார்ச் உதவியுடன் நடத்துனர் பயண சீட்டு வழங்கும் காட்சி வெளியாகி உள்ளது. அரசு பேருந்துகள் பாதுகாப்பற்ற பயணத்திற்கு வழிநூறுப்பதாக தன்னார்வலர்களும் பயணிகளும் குற்றச்சாட்டு.
சூளகிரி அருகே, சாலை ஓரங்களில், மூட்டை மூட்டையாக உணவகங்களின் கழிவுகள் வீசி செல்லப்படுவதால், மக்கள் நலம் பாதிப்பு. இத்தகைய செயல்களில் ஈடுபடும் சமூக குற்றவாளிகளை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க. பொது மக்கள் கோரிக்கை.
பேரிகை அருகே, சிந்தலன்தொட்டி ஊரில், இரண்டு மின்மாற்றிகளில், 115 கிலோ செம்பு மற்றும் 150 லிட்டர் எண்ணெய் ஆகியவை திருடப்பட்டுள்ளது அறிந்து அத்திமுகம் மின்வாரிய உதவி பொறியாளர் அதிர்ச்சி.
தேன்கனிக்கோட்டை அருகே மணியம்பாடி ஊரைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி, பெண் குழந்தையை பெற்றெடுத்தார். 43 வயது ருத்ரேஷ் என்பவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
பேரிகை அருகே சிலை அங்கொண்டபள்ளி எனும் ஊரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் உடலை காவல்துறையினருக்கு தெரிவிக்காமல் எரித்த உறவினர்கள்.
தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1500 ஏக்கர்களில் மா சாகுபடி செய்யப்படுவதாகவும், அவற்றை யானைகள் கூட்டம் புகுந்து வீணடித்து வருவதை தொடர்ந்து, யானைகளிடமிருந்து இந்த விளை பொருட்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என உழவர்கள் கோரிக்கை.
ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், விளைந்த மாங்கனிகளுக்கு சரியான விலை கிடைக்காததால் உழவர்கள் வேதனை.
ஓசூரில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஓசூர் Saint Peter s ஆராய்ச்சி நடுவம் சார்பில், இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.