ஓசூர் வட்டாட்சியர் அலுவலகம் சாலையில் அமைந்துள்ள முருகன் கோவிலில், கடந்த நாள் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, ஏராளமான நம்பிக்கையாளர்கள் வழிபட்டுச் சென்றனர்.
ஓசூர் மலை கோவில் அடிவாரத்தில், சட்டத்திற்கு புறம்பாக, சேவல் சண்டை போட்டிகள் நடத்தி வந்தவர்களை, காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி மு கவின் அவசர செயற்குழு கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் ஒய் பிரகாஷ் முன்னிலையில் நடைபெற்றது.
ஓசூர் அடுத்த ஆனைக்கல் அருகே, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொன்று சூட்கேஸில் வைத்து தண்டவாளம் அருகே வீசி சென்ற ஏழு பீகார் இளைஞர்கள், கைது செய்யப்பட்டுள்ளன. இது ஓசூர் மக்களுக்கு மற்றொரு எச்சரிக்கை.
பேரிகை அருகே இருசக்கர வண்டியில் கடத்தி வந்த 4 கிலோ கஞ்சா பிடிபட்டது. அதை எடுத்து வந்தவர்கள் தப்பி சென்று விட்டதாகவும், அவர்களை தேடி வருவதாகவும், காவல்துறை அறிவிப்பு.
பாகலூர் அருகே, வெங்கடராயபுரத்தில், வீடு கட்டுமான பணியின் போது, இரண்டாவது தளத்தில் இருந்து தவறி விழுந்து கட்டிடத் தொழிலாளி பலி.
பயணிகளுக்கு பயண சீட்டு வழங்காமல் பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு தப்பி ஓடிய நடத்துனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.