Hosur News, ஓசூர் செய்திகள் - Hosur Daily Podcast – Weather, Panchangam, Astrology & News | 11 June 2025

ஓசூர் நகர் வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் நல சங்கம் சார்பில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.  ஓசூர் ஊடகவியலாளரும் புகைப்பட கலைஞருமான மாதையன், ஓசூர் நகர் தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார். ஓசூர் ஆன்லைன் சார்பில் வாழ்த்துக்கள். 

ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், ஆண்டு ஒன்றுக்கு சுமார், 500 குழந்தை திருமணம் நடப்பதாகவும், அரசு அலுவலர்கள், காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்வது இல்லை என்றும் தன்னார்வலர்கள் குற்றச்சாட்டு.

ஓசூர் சுற்றுவட்டார பகுதி காடுகளில் நாவல் மரங்கள் வெட்டி திருடப்படுவது தொடர்வதால், வெளி மாநிலங்களில் இருந்து, நாளொன்றுக்கு ஒரு டன் நாவல் பழம் கொண்டுவரப்படுவதாக தகவல். நாவல் மரங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தன்னார்வலர்கள் கோரிக்கை. 

ஓசூர் பேருந்து நிலையத்தின் கழிவறை சீர் கெட்டு கிடப்பதை, சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை. 

ஓசூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மூன்று நாட்களாக நடைபெற்று வந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவுற்றது. 

சூளகிரி அருகே 14 ஊர் மக்கள் நடத்திய திரௌபதி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. 

கெலமங்கலம் அருகே தடிக்கல் என்னும் ஊரில், ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும் சேர்ந்து மது அருந்தியதாகவும், அவர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறில் பெண்ணை தாக்கியதால் இரண்டு ஆண்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

வி ஐ டி பல்கலைக்கழக வேந்தர் கோ விஸ்வநாதன், ஓசூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மறைந்த பேராசிரியர் வனங்காமுடி, படத்திறப்பு விழாவில் புகழஞ்சலி செலுத்திய போது, படித்த நல்ல தலைவர்கள் பொருளாதாரத்தை சீர் செய்ய முன்வர வேண்டும் என குறிப்பிட்டு பேசினார். 

ஓசூர் இஸ்கான் கோவிலில், படகு திருவிழா நடைபெற்றது. 

ஓசூர் அருகே, நாகமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் 9 மற்றும் 10வது சிப்காட்டுக்கு நிலம் எடுப்பது தொடர்பான கூட்டத்தில் இருந்து, உழவர்கள் வெளிநடப்பு.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: