தேன்கனிக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மதில் சிதலமடைந்து இருப்பதாலும், நுழைவாயிலுக்கான கதவு இல்லாததலும், அரசு மதுபான கடையின் வாடிக்கையாளர்கள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தை மது கூடமாக மாற்றி அமைத்துள்ளதாக பகுதி பொதுமக்கள் வேதனை. கஞ்சா உள்ளிட்ட பொருட்களுக்கு அடிமையானவர்களும் இந்தப் பள்ளி வளாகத்தை தங்கும் விடுதியாக மாற்றி அமைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு. மாவட்ட ஆட்சியரும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என மக்கள் ஏக்கம்.
தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஐந்தாவது சிப்காட் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துதலுக்கான அமைதி பேச்சு வார்த்தை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. கூட்டத்தில் வட்டாட்சியர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பங்கெடுப்பதாக கூறி, நிலத்தின் உரிமையாளர்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. நிலத்தை வழங்க விருப்பமில்லாத உழவர் பெருமக்கள் ஏராளமானவர்கள் காலை 10 மணி அளவில் கூடிய நிலையில், அரசு அலுவலர்கள் வருகை புரிய தவறியதால், விவசாயிகள் கலைந்து சென்றனர்.
ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார காட்டுப்பகுதிகளில் பல்வேறு வகையான அரிய வகை மரங்கள், பறவைகள் மற்றும் விலங்குகள் வாழ்கின்றன. ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மற்றும் அக்டோபர் திங்கள்களில் மேற்கு மலை தொடர்ச்சியில் இருந்து பட்டாம்பூச்சிகள் லட்சக்கணக்கில் வலசை வரும். இந்த ஆண்டும் இத்தகைய நிகழ்வு பில்லிகுண்டு உள்ளிட்ட பகுதிகளில், நடைபெறும் வேளையில், சாலையில் பயணிக்கும் வண்டிகளால் ஏராளமானவை கொல்லப்படுகின்றன.
இன்று துணை மின் நிலையங்களில் மராமத்து பணி நடைபெற இருப்பதால், ஓசூர் நகர், அந்திவாடி, சூசூவாடி, பேகேபள்ளி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் பகிர்மானம் இருக்காது.
ஓசூர் ஒன்றியம் ஈச்சங்கூர் ஊராட்சியில் சுமார் 45 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு மக்கள் நல பணிகளுக்கு, பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்வில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் பங்கு கொண்டார்.
சூளகிரி பஜார் தெருவில் இருக்கும் பேட்டை மாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடைபெற்றதன் 33 வது ஆண்டு நாள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
ஓசூர் குடிசட்டலு திம்மராயர் சுவாமி கோவிலுக்கு ஆதி சுஞ்சனகிரி சுவாமிகள் வருகை புரிந்தார்.
ஓசூர் மகா பிரத்தியங்கரா தேவி கோவிலில் மிளகாய் வற்றல் யாகம் நடைபெற்றது.
ராணுவத்தையும் தி மு க வையும் ஒப்பிட்டு ஓசூரில் நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேச்சு.
கெலமங்கலம் அருகே அக்கொண்டபள்ளி ஊரில் கரகம்மாதேவி கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.