ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மா விளைச்சல் இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட கூடுதல் என்பதால், கடும் விலை வீழ்ச்சி. கிலோ ரூபாய் 3 என்ற விலையில் சில வகை மாம்பழங்கள் விற்கப்படுகின்றன. அதனால் உற்பத்தியாளர்களுக்கு கடும் மன உளைச்சல்.
கெலமங்கலம் அருகே குட்டூரில், மின் கசிவு ஏற்பட்டு இறந்த இரண்டு மாடுகளுக்கு இழப்பீடாக, மாட்டின் உரிமையாளருக்கு, ரூபாய் ஐம்பதாயிரத்தை, முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி வழங்கினார்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வரும், தளியைச் சேர்ந்த திரு கணேஷ் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பாக மாநில ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அஞ்செட்டி வட்டம் கேரட்டி ஊரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பிற்படுத்தப்பட்ட நலத்துறை சார்பாக பயனாளிக்கு விலையில்லா சலவை பெட்டி வழங்கப்பட்டது.
தென்பெண்ணை ஆற்றில், மீண்டும் வேதிப்பொருள் நுரை. விளைபொருள் உற்பத்தியாளர்கள் வேதனை.
உலக அளவில் தேடப்பட்டு வந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த குற்றவாளி கிருஷ்ணகிரி அருகே கைது.
ஓசூர் வட்டம் உழவரைத் தேடி வேளாண்மை திட்டத்தின் கீழ் உழவர் நலத்துறை திட்ட முகாம் நடைபெற்றது.
சூளகிரியில் போலி பத்திரப்பதிவாளர் செயல்படுவதாக வரதராஜன் என்பவர் பகிரங்க குற்றச்சாட்டு.
கையூட்டு ஒழிப்பு காவல் துறையினர் சார்பில், போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு சாராய்வாளர் வீட்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஓசூர் KCC நகரில் அமைந்துள்ள வலம்புரி வரசித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று மாலை 6 மணி அளவில் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.