Hosur News, ஓசூர் செய்திகள் - Hosur Daily News Podcast 16 June 2025

திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

அஞ்செட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில், ராகி கொள்முதல் நடுவத்தின் மூலம் பயனடையும் ராகி உற்பத்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார். 

அஞ்செட்டி மலைப்பகுதிகளில் உள்ள ஊர்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். 

ஓசூர் அரசு மருத்துவமனை முன்னாள் ஊழியர், மருத்துவ பயனாளிகளை மிரட்டி பணம் பறிப்பு. புகார் இருந்தும், காவல்துறை மூலம் முறையான நடவடிக்கை எடுக்க தவறிய ஓசூர் அரசு மருத்துவமனை. 

ஓசூரில் 2500 க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்ற, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம், சிறப்பாக நடைபெற்றது. 

அஞ்செட்டி அருகே, பெற்றோர் வளர்த்து வந்த ஆடு, மாடு, கோழிகளை, நஞ்சு கொடுத்து கொன்ற மகன்.  வாழ்வாதாரமின்றி பெற்றோர் வேதனை.  பகுதி மக்கள் அச்சம்.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: