Hosur News, ஓசூர் செய்திகள் - Hosur Daily Podcast – Weather, Panchangam, Astrology & News | 21 June 2025

ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி ரோட்டரி சங்கம் சார்பில், 68 லட்சம் மதிப்பிலான எட்டு டயாலிசிஸ் கருவிகளை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வழங்கினர். 

ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத், ஏராளமான நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கினார். 

கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே, 31 வது மாங்கனி கண்காட்சி, இன்று ஜூன் 21, சனிக்கிழமை முதல் துவங்க உள்ளது.  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மாங்கனி கண்காட்சியை துவக்கி வைக்க உள்ளார். 

ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில், ஜெராக்ஸ் கடைக்காரர்கள், ஆதார் அட்டைகளில், 13 வயது சிறுமிகளின் வயதை 21 வயது என்று மாற்றி, 30 வயது ஆண்களுக்கு திருமணம் முடித்து வைக்கும் அவலம் தொடர்வதை அறிந்த மாவட்ட ஆட்சியர், வட்டார மருத்துவ அலுவலர்களை காவல் துறையில் புகார் தெரிவிக்க அறிவுறுத்தியதை அடுத்து, கெலமங்கலம் மற்றும் தேன்கனிக்கோட்டை காவல் நிலையங்களில் கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர், புகார் அளித்தார்.  இதை தொடர்ந்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 

எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் புதிதாக கட்டப்பட்ட 214 கடைகளில், எட்டு கடைகளை ஏலத்தில் எடுத்த ஒப்பந்ததாரர்களுக்கு கடைகளில் திறவுகோல், ஓசூர் மேயர் தலைமையில் வழங்கப்பட்டது. 

சூளகிரி அருகே இயங்கி வரும் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் நிலையத்தில், திறந்த நிலையில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் நடமாடும் மற்றும் விளையாடும் சிறார்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது.  திறந்த நிலையில் உள்ள கழிவு நீர் வாய்க்காலை பாதுகாப்பானதாக மாற்றியமைக்க தன்னார்வலர்கள் கோரிக்கை. 

பருவ மழை தொடங்கியதை தொடர்ந்து, ஓசூர் அடுத்த பில்லிகுண்டு காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

மா உற்பத்தியாளர்களுக்கு சரியான விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கூறி, அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: