Hosur News, ஓசூர் செய்திகள் - Hosur Railway station development ஓசூர் தொடர்வண்டி நிலையம், உலக தரத்திற்கு உயர்த்தப்பட இருக்கிறது!

ஓசூர் ரயில் நிலையம், 120 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறை கொண்டது. மொரப்பூர், தருமபுரி மற்றும் ஓசூரை இணைக்கும் இருப்புப் பாதை, 1906 ஆம் ஆண்டு, ஜனவரி திங்கள், 18 ஆம் நாள், பொது மக்களின் பயன்பாட்டிற்கு துவங்கி வைக்கப்பட்டது. அன்றைய நாள் முதல், தனது மக்கள் பணியை சிறப்புடன், ஓசூர் ரயில் நிலையம் செய்து வருகிறது.

இந்த 120 ஆண்டு வரலாற்றைக் கொண்ட நமது ஓசூர் ரயில் நிலையத்தை, எந்த வகையில எல்லாம் மேம்படுத்த போகிறார்கள், புதிதாக எத்தகைய வசதிகள் நமது ஓசூர் ரயில் நிலையத்தில் அமல்படுத்தப்பட இருக்கிறது, எத்தகைய வளர்ச்சியை நோக்கி நமது ஓசூர் ரயில் நிலையம் சென்று கொண்டிருக்கிறது என்பன குறித்து இந்த காணொளியில் பார்க்கலாம்.

"ஓசூர் – ஒரு வளர்ந்து வரும் தொழில்நகரம்!
இப்போது, அதன் தொடர்வண்டி நிலையமும் உலக தரத்துக்கு மேம்படக்கிறதென்றால்...
நம்ம ஓசூருக்கு இன்னும் ஒரு பெருமைதானே இது?"

"ஓசூர் ரயில் நிலையம் – நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வரும் முதன்மையான தொடர்வண்டி நிலையமாக திகழ்கிறது.

பெங்களூரு, கோவை, கொச்சின், திருவனந்தபுரம், மும்பை, மதுரை என பல ஊர்களுக்கு ஒரு வலுவான போக்குவரத்து இணைப்பாக உள்ளது.

நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கட்டுமான திட்டங்கள் மூலம் இப்போது, இது வெறும் தொடர்வண்டி நிலையம் அல்ல –  பொருளாதார வளர்ச்சியின் வாயிலாக மாற போகிறது!"

25 ஆண்டுகளுக்கு முன்பு ஓசூர் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தீர்கள் என்றால், அதன் பழமையான தோற்றத்தை கண்டிருக்கலாம்.  நாளொன்றில் ஏதாவது ஒரு ரயில் வந்து செல்லும்.  மக்கள் நடமாட்டம் அற்ற பகுதியில் ஒன்றாக இது திகழ்ந்து வந்தது.  இன்று அதற்கு நேர் மாற்றாக, ஓசூரில் போக்குவரத்தில் சிறப்பான பங்காற்றி வருகிறது. 

சுமார் 2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஓசூர் ரயில் நிலையம், இப்பகுதியின் மிகப்பெரிய சரக்குகள் கையாளும் தொடர்வண்டி நிலையமாக திகழ்ந்து வருகிறது. 

"Amrit Bharat Station Scheme என்ற ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ்,
ஓசூர் ரயில் நிலையம் முழுமையாக மாறப்போகிறது!
இங்கே வரப் போகும் அம்சங்கள்:
✅ ஏசி லவுஞ்ச்
✅ லிப்ட், எஸ்கலேட்டர்
✅ மேம்பட்ட கழிப்பறைகள்
✅ Wi-Fi, சுமூகமான டிக்கெட் வசதி
✅ சோலார் எரிசக்தி, பசுமை சுத்தம்
✅ CCTVs & பாதுகாப்பு அமைப்புகள்"

பயணிகள் இறங்கி, தொடர்வண்டி நிலையத்தை விட்டு வெளியேறிச் செல்வது மற்றும் நடை தடங்களை சென்றடைவது இடர்பாடுகள் நிறைந்ததாக இருப்பதை கருத்தில் கொண்டு, தானியங்கி எஸ்கேலேட்டர் வசதி ஓசூரில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.  அதற்கான கட்டுமான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. 

தொடர்வண்டி நிலையத்தை அடைவதற்கு என்று ஒரு பாதையும், வெளியேறுவதற்கு என்று தனியாக ஒரு பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது.  இதனால் தொடர்வண்டிகள் வரும் நேரத்தில் ஏற்படும் இட நெருக்கடி முற்றிலுமாக தவிர்க்கப்படும். 

மூன்று நடை மேடைகளைக் கொண்டு இயங்கி வரும் ஓசூர் ரயில் நிலையம், விரைவில் ஏழு நடை மேடைகளை கொண்டதாக மாற்றி அமைக்கப்பட இருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. 

"ஓசூர், மற்றொரு வழக்கமான ஒரு நகரமில்லை –
இது ஒரு விரைவாக வளர்ந்து வரும் தொழில்துறை வளையம்!
Ashok Leyland, TVS, டாட்டா எலக்ட்ரிக்கல், Ola Electric போன்ற நிறுவனங்கள் இங்கிருக்கின்றன.
அதனால்தான், அதற்கு ஏற்ப ரயில்வே நிலையமும் புதிப்பொலிவடைய வேண்டும்.
இதுவே இப்போது நடைபெறுகிறது!"

"பார்க்கிங் வசதி இல்லைன்னு பலர் சொல்லுவாங்க…
இப்போ அதுக்கெல்லாம் முடிவு! ஏராளமான பார்க்கிங் வசதிகளுடன் புத்தம் புது பொலிவுடன். 
இது ஓசூருக்கு ஒரு முக மாற்றம்!"

பெங்களூரு முதல் ஓசூர் வரையிலான இரட்டை வழி இருப்புப் பாதை பணிகள் இன்னும் சில மாதங்களில் நிறைவடைந்து, பெங்களூரு மற்றும் ஓசூருக்கு இடையிலான விரைவு வண்டிகள் இன்னும் பல இயக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.  இதனால், ஓசூருக்கு பயணிப்பவர்கள், பெங்களூருவின் சாலை போக்குவரத்து நெருக்கடியில் இருந்து தப்பித்து, நேரத்தை மிச்சப்படுத்துவர். 

இந்த பணிகள் முடிந்து, உடனடியாக ஓசூர் ஓமலூர் இடையேயான இரட்டை வழி இரும்பு பாதை பணிகள் துவங்க இருக்கின்றன.  அத்தகைய சூழலில், ஓசூர் வழியாக பல ஊர்களுக்கு, வந்தே பாரத் மற்றும் சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயங்கும்.  இது ஓசூரில் தொழில் வளர்ச்சியை மேலும் உயர்த்தும்.

"பயணமெல்லாம் உயர்தரமானதாக மாறும்போது,
அது ஒரு நகரத்தின் தரம் உயர்வு அதன் அடையாளம்!
ஓசூர் ரயில் நிலையம், விரைவில் உலக தரம் பெற்ற ஒரு ரயில்வே ஹப் ஆக மாறும் நாள் அருகில் தான்."

"நம்ம ஓசூர் வளர்ச்சி பாதையை documentation பண்ணது நாங்கதான்!
இந்த வீடியோ உங்க மனசுக்கு பிடிச்சிருந்தா…
👇
Like பண்ணுங்க, Share பண்ணுங்க, HosurOnline சானலை Subscribe பண்ணுங்க!
நன்றி – வளர்பிறை போல வளரட்டும் நம்ம ஓசூர்!"

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: