தொழிற்சாலைகளுக்கு விலை இல்லாமல், ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர்... ஆனால் விளை பொருள் உற்பத்தியாளர்கள் வரி கட்ட வேண்டுமாம்! ஒன்றிய அரசு அடுத்தடுத்து, அடித்தட்டு மக்களின், குறிப்பாக விளை பொருள் உற்பத்தியாளர்களின், அடிமடியில் கை வைக்கும் விதமாக தனது திட்டங்களை வரைவு திட்டங்களாக வெளியிட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆர்பிஐ மூலம், தங்க நகை கடன்களுக்கு, நகை வாங்கியதற்கான ரசீது வேண்டும் என சுற்றறிக்கை வெளிவந்தது. அடுத்ததாக இரண்டு சக்கர வண்டிகளுக்கும் சுங்கம் விதிக்க வேண்டும் என்று கூறினார்கள். இப்போது புதிய தாக்குதல், தண்ணீருக்கு வரி! இது குறித்து மக்களின் கருத்தை கேட்கலாம்!
ஏற்கனவே உழவர் பெருமக்கள், தாங்கள் விளைவித்த பொருட்களுக்கு சரியான விலை கிடைப்பது இல்லை என்கிற மன உளைச்சலில் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், அடிப்படை புரிதல் இன்றி, அடித்தட்டு மக்களை குறித்தான சிந்தனையின்றி, அரசுகள் பல்வேறு திட்டங்களை, ஏழை எளிய மக்களை பாதிக்கும் விதமாக வெளியிடுகின்றன.
தன்னார்வலர் மூர்த்தி ஓசூர் ஆன்லைனிடம் கருத்து கூறும் பொழுது,
விளைபொருள் உற்பத்தியை கட்டுப்படுத்தினால், முறையான விலை கிடைக்கும் என்று சிலர் கருத்து கூற துவங்கியுள்ளனர். அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா... ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா... சாமியிடம் பேசுது புள்ள... தாயழுகை கேட்கவுமில்லை... என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது. இத்தகைய கருத்தை கொண்டவர்கள் செல்வந்தர்களாகவும், ஏழ்மை நிலை குறித்து தெரிந்து கொள்ள தயங்குபவர்களாகவும் இருக்கிறார்கள்.
இந்த மண் அனைத்து மனிதர்களுக்குமானது, அனைத்து உயிர்களுக்குமானது என்ற எண்ணம் வேண்டும். களிமண்ணையோ அல்லது பணத்தின் காகிதத்தையோ அல்லது உலோகத்தால் ஆன நாணயங்களையும் தின்று வாழ முடியாது. விளை பொருள் உற்பத்தியாளர்கள் தங்களுக்கான விலை கிடைக்கவில்லை என்று புலம்பினாலும், கடன் வாங்கினாலும் மீண்டும் மீண்டும் தாங்கள் செய்த தொழிலை செய்கிறார்கள். அதனால் தான், புரிதல் இன்றி கருத்துச் சொல்லும் செல்வந்தர்களாலும், கருத்துச் சொல்ல உயிர் வாழும் அளவிற்கு உணவு கிடைக்கிறது என்று கூறினார்.
தொழிற்சாலைகளுக்கு விலை இல்லாமல் தண்ணீர், அதனால் வேலை வாய்ப்புகள் பெருகுகிறது, வரி வருவாய் கிடைக்கிறது, இந்திய நாட்டின் ஜி டி பி உயர்கிறது. ஆனால் உழவர்களுக்கு தண்ணீரை விலை இல்லாமல் கொடுத்தால் நாட்டிற்கு என்ன பயன் என்று, விவசாய சங்க தலைவர் கணேசன் அவர்களிடம் ஓசூர் ஆன்லைன் சார்பாக கருத்தை பகிர்ந்தோம். அதற்கு அவர்
....