Hosur Book Fair Inaguration Function 11 July 2025 5PM
The 14th Annual Book Fair in Hosur, jointly organized by the Krishnagiri District Administration and the Tamil Nadu Science Forum, has officially commenced with enthusiastic support from the public.
District Collector Mr. Dinesh Kumar inaugurated the event by cutting the ribbon at the air-conditioned exhibition hall.
📚 Fair Highlights:
Open daily from 11 AM to 9 PM
Until July 22, 2024
Features 110 book stalls
Over 1,00,000+ book titles across genres
HosurOnline brings you daily highlights and exclusive coverage of the special events happening at the fair.
🎥 Don’t forget to subscribe to stay updated with all cultural happenings in Hosur!
14 வது ஓசூர் புத்தகத் திருவிழா உங்களை இனிதே வரவேற்கிறது!
கிருஷ்ணகிரி மாவட்ட மேலாண்மை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஓசூர் பொதுமக்களுடன் இணைந்து நடத்தும், ஓசூர் புத்தகத் திருவிழா!
ஓசூர் மூகண்ட பள்ளியில் உள்ள ஹில்ஸ் ஹோட்டலில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் கடந்த நாள் மாலை ஐந்து மணி அளவில், ரிப்பன் வெட்டி, புத்தக கண்காட்சியை துவங்கி வைத்தார்.
சுமார் நூற்றி பத்து விற்பனை கடைகள் அமைக்கப்பட்டு, ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது!
வரும் இருபத்தி இரண்டாம் நாள் செவ்வாய்க்கிழமை வரை ஒவ்வொரு நாளும் காலை பதினோரு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை புத்தகத் திருவிழா கண்காட்சி நடைபெறும்.
கண்காட்சியை சுற்றி பார்ப்பதற்கு எவ்வித கட்டணமும் இல்லை. பொதுமக்கள் வாங்கும் புத்தகங்களுக்கு பத்து விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுகிறது!
ஒவ்வொரு நாளும் மாலை ஆறு மணி அளவில், பல்வேறு தலைப்புகளில், சொற்பொழிவாளர்கள் சொற்பொழிவாற்றுகிறார்கள்.
வருக! வருக! புத்தகம் வாங்கி சமூக வளர்ச்சி பெருக!
கிருஷ்ணகிரி மாவட்ட மேலாண்மை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இணைந்து ஓசூர் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் 14 வது ஆண்டு புத்தகத் திருவிழா கடந்த நாள் மாலை துவங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் புத்தகக் கண்காட்சி அரங்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
வரும் ஜூலை 22 ஆம் நாள் வரை ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை, சுமார் 110 புத்தகக் கடைகளுடன், ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட அரங்கில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்கப்படுகின்றன.
ஓசூர் ஆன்லைன், ஓசூர் புத்தகத் திருவிழாவில் நடைபெறும் அனைத்து சிறப்பு நிகழ்ச்சிகளையும் தொகுப்பாக ஒவ்வொரு நாளும் பொது மக்களின் பார்வைக்கு காணொளி காட்சியாக வழங்குகிறோம்.