படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 3 நிமிடங்கள்

108 AMBULANCE NEWS108 ambulance service might be extending help only to those in emergency need of medical help in rest of the state, but in Hosur it offers logistic support for vegetable vendors at a very low cost – a new initiative by money making motive staffs of the service.

108 service in the state is sponsored by central government funding through a private operator, which is fully co-ordinated by Police, fire service, district administration, health department etc., of the state and involves lot of tax payers money – with the only motive of providing support to those in emergency medical need.

100s and 1000s of lives have been saved through the service.

But here in Hosur, the same service is being used for commercial purpose as the staffs here use it for providing logistic support for transporting vegetable to the commercial markets at subsidised price.

ஓசூரில் சேவை எண்ணத்தை மறந்து பணம் சம்பாதிக்கும் நோக்கில் பணிபுரியும் 108 ஆம்புலன்ஸ் காய்கறிகளை மார்க்கெட்டுகளில் ஏற்றி சென்று சம்பாதிக்கிறார்கள்

ஓசூரில் சேவை எண்ணத்தை மறந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பணிபுரியும் 108 ஆம்புலன்சின் சில டிரைவர்கள், காய்கறிகளை மார்க்கெட்டில் மொத்தமாக ஆம்புலன்சில் ஏற்றி சென்று பணம் சம்பாதிக்கிறார்கள்.

மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள அரசு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டம்.

ஏழை, எளிய மக்களுக்கும் இலவசமான மருத்துவ சேவை விரைவில் கிடைக்க வேண்டும் என்ற உன்னத எண்ணத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் இந்தியா முழுவதும் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. அதே போல கர்ப்பிணி தாய்மார்களும், உரிய நேரத்தில் மருத்துவமனை சென்று பிரசவம் செய்து குழந்தை பெற்று செல்கிறார்கள்.

மக்களின் நலனுக்காக சேவை எண்ணத்தில் தொடங்கப்பட்ட இந்த ஆம்புலன்ஸ் சேவை ஓசூர் பகுதியில் சிலர் வியாபாரமாக்கி பணம் சம்பாதிக்கிறார்கள்.

ஓசூரில் கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பத்தலப்பள்ளி காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் வரக்கூடிய 108 ஆம்புலன்சுகள் காய்கறிகளை வண்டியில் ஏற்றி, கொண்டு சில கடைகளுக்கு கொண்டு இறக்குகிறார்கள். அதற்காக குறிப்பிட்ட பணமும் பெற்றுக் கொள்கிறார்கள். நோயாளியை ஏற்ற வேண்டிய ஆம்புலன்ஸ் காய்கறி ஏற்றி செல்லும் வேனாக மாறி விட்டது.

சேவை எண்ணத்தை மறந்து 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பணியாற்றுகிறார்கள். ஓசூர் சுற்று வட்டாரத்தில் தனியார் மருத்துவமனைகளுடன் தொடர்பு வைத்துள்ள அவர்கள், நோயாளிகளை அரசு ஆஸ்பத்திரியில் இறக்காமல், நேராக தனியார் மருத்துவமனையில் இறக்கி, பணம் கமிஷனாக பெறுகிறார்கள்.

விபத்தில் சிக்கும் நோயாளி, பேச்சு மூச்சின்றி இருப்பார். அவரது நிலைமையை இவர்கள் சாதகமாக்கி கொண்டு, தனியார் மருத்துவமனையில் இறக்கி, பணம் கமிஷனாக பெறுகிறார். அதே போல விபத்துகள் நடக்கும் இடங்களுக்கும் உடனடியாக செல்லாமல் தாமதமாக செல்கிறார்கள். இதனால் தனியார் மருத்துவமனைகளின் ஆம்புலன்சுகள் முன்னதாகவே சென்று காயமடைந்தவர்களை எடுத்து சென்று அவர்களிடம் பணத்தை கறந்து விடுகிறார்கள்.

சேவை நோக்கத்தை மறந்து, அவர்கள் செயல்படுகிறார்கள். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.