Auto Rickshaw தானியங்கி மூவுருளி உந்து
Auto Rickshaw தானியங்கி மூவுருளி உந்து
படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்
Auto Rickshaw
Auto Rickshaw

Velmurugan of Rayakottai HUDCO is an auto driver. Three men gang hired his auto and asked him to go to SIPCOT area first. But for no reason, they asked him to drive the auto towards Kasavagatta village. While Velmurugan was driving his auto, the men, at knife point, took away the auto, mobile phone and cash of Rs 1000 from Velmurugan.

Velmurugan sought the help of HUDCO police. Police investigation found the auto near Chandapuram near Bangalore.

Police are now searching for those three who abducted the auto.

ஓசூரில் ஓட்டுனரை மிரட்டி கடத்தப்பட்ட ஆட்டோவை காவல் துறையினர் மீட்டனர். அது தொடர்பாக 3 பேரை தேடி வருகிறார்கள்.

ஓசூர் ராயக்கோட்டை அட்கோவை சேர்ந்தவர் வேல்முருகன் ஆட்டோ ஓட்டுனர். நேற்று இரவு இவரது ஆட்டோவில் 3 பேர் ஏறினார்கள். முதலில் தர்கா செல்ல வேண்டும் என கூறியுள்ளனர். பின்னர் கசவுகட்டாவிற்கு ஆட்டோவை ஓட்டச் சொன்னார்கள். அந்த நேரம் அவர்கள் திடீரென்று வேல்முருகனை கத்தியை காட்டி மிரட்டி தாக்கினார்கள்.

மேலும் ஆட்டோவையும், வேல்முருகன் வைத்திருந்த கைபேசி மற்றும் பணம் ரூ.ஆயிரத்தை பறித்து சென்றனர்.

அதை கண்டு அதிர்ச்சியடைந்த வேல்முருகன் இதுகுறித்து அட்கோ காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் தாமரைச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் கடத்தப்பட்ட ஆட்டோ கர்நாடக மாநிலம் சந்தாபுரத்தில் இருப்பதாக தகவல் கிடைத்து. இதையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று ஆட்டோவை மீட்டனர்.

மேலும் அதை கடத்திய நபர்களை தேடி வருகின்றனர்.