படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்

Santhosh-Killed5 year old boy Santosh, son of Mano, of Chippay Palayam village near Mathigiri was said to be playing along with his friends near a pond in the village.

While playing, he has fallen into the pond and died. According to his parents and relatives, the boy was pushed into the pond with intention and its not an accident.

Mathigiri police have registered a case and are investigating the allegation.

ஒசூர் அருகே ஒன்றாம் வகுப்பு மாணவன் குட்டையில் விழுந்து பலி : சிறுவனை குட்டையில் தள்ளியதாக உறவினர்கள் காவலர்களிடம் புகார்

ஒசூர் அடுத்த மத்திகிரி சிப்பாய்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோ இவரது 5 வயது மகன் சந்தோஷ் அருகில் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் மாணவன் சந்தோஷ் அப்பகுதியில் உள்ள மற்ற சிறுவர்களோடு விளையாடி கொண்டிருநதான். அப்போது அங்குள்ள ஒரு குட்டையில் விழுந்து முச்சுதிணறி உயிரிழந்தான்.

இதுகுறித்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒசூர் மத்திகிரி காவலருக்கு தகவல் அளித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக ஒசூர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சிறுவன் சந்தோஷ் தானாக குட்டையில் விழவில்லை என்றும் அவனை யாரோ குட்டையில் தள்ளி விட்டுள்ளனர் இதனால் அவன் மூச்சு திணறி உயிரிழந்துள்ளான் என சிறுவனின் பெற்றோர்கள் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் சிறுவன் சாவு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.