படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

ஒசூரில் பழமைவாய்ந்த சந்திரசூடேசுவரர் திருக்கோயிலில் உலக நன்மை வேண்டி 23 வது ஆண்டு பெறிய ஒன்பது சண்டி யாகம் நடைபெற்றது. தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற ஒன்பது சண்டி யாக வழிபாட்டு நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டு சென்றனர்.

ஒசூரில் பழமைவாய்ந்த சந்திரசூடேஸ்வரர் உடனுரை மரகதம்மபாள் கோயிலில் உலக நன்மை வேண்டி 23வது ஆண்டு ஒன்பது சண்டி யாகம் நடைபெற்றது. கடந்த நாள் தொடங்கி 05.08.2018 வரை தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற இந்த யாக வழிபாட்டில் உலக நன்மையடைய வேண்டும், மழை பொழிய வேண்டும், உழவு, தொழில் வளம் செழிக்க வேண்டும், அனைத்து பொதுமக்களும் நலத்துடன் வாழ வேண்டும் என வழிபாடுகள் செய்யப்பட்டன.

முன்னதாக வழிபாட்டுப் பொருட்களுடன் கோயில் பிரகாரங்களை மேள தாளங்களுடன் பொதுமக்கள் சுற்றி வந்தனர்.

இந்த பெறிய ஒன்பது சண்டி யாக வழிபாட்டில் 15 வேதவிற்பனர்கள் வேத மந்திரங்கள் ஒதி கோம யாகங்களை நடத்தினர்.

உலக நன்மைக்காக நடைபெற்ற இந்த ஒன்பது சண்டி யாக வழிபாட்டில் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலிருந்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தி சென்றனர்.