Adulterated food grains on sale in Hosur

2
Food Adulteration
Food Adulteration

For the last 15 days, in almost in all housing colonies and residential areas, there were people found selling cereals and spices at bottom price.

While, many people bought the food products as it is sold at low price, few kept away, thinking that, the products might be of low quality.

A check by food inspectors in Hosur, revealed that, the food products sold were adulterated, particularly the spices like Pepper and mustard seeds.

Officials, instead of taking legal action, allowed those adulterates to escape by giving simple warning.

ஓசூரில் உரிய அனுமதியின்றி சாலையோரங்களில் விற்பனை செய்யப்பட்ட கலப்பட மளிகை பொருட்கள் : விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கடும் எச்சரிக்கை

கிருட்டிணகிரி மாவட்டம் முரசு நாடு என்கிற ஓசூரில் உரிய அனுமதியின்றி சாலையோரங்களில் விற்பனை செய்யப்பட்ட பருப்பு, உளுந்து, மிளகு, சோம்பு, கடலை, வத்தல் உள்ளிட்ட கலப்பட மளிகை பொருட்களை அரசு அலுவரKஅள் கண்டு பிடித்தனர்.

இதுபோன்று கலப்பட பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.

ஓசூர் நகரில் பாகலூசாலை, ராயக்கோட்டைசாலை, மத்திகிரிசாலை மூக்கண்டப்பள்ளி, சூசூவாடி, டி.வி.எஸ்.நகர், அன்னை சத்தியா குடியிருப்பு பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் கலப்படம் செய்யப்பட்ட மளிகை பொருட்களை குறைந்த விலைக்கு சிலர் விற்பனை செய்து வந்தனர்.

இந்த கலப்பட மளிகை பொருட்களினால் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் கோளாருகள் ஏற்படுவதாகவும் இதனை தடுக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.
 
இதனைத்தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் புஷ்பராஜ் மற்றும் ஓசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் துளசிராமன் ஆகியோர் சாலையோரங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்த கலப்பட பொருட்களை ஆய்வு செய்தனர்.

இதில் ஏராளமான பொருட்களில் கலப்படம் இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. கோவை மற்றும் சேலத்திலிருந்து லாரிகளில் மூட்டை, மூட்டையாக உளுத்தம்பருப்பு, மிளகு, சோம்பு, பொரிகடலை, துவரம்பருப்பு, மிளகாய்வத்தல் உள்ளிட்ட பல்வேறு மளிகை பொருட்களை எடுத்து வந்து குறைந்த விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.

கலப்படம் செய்யப்பட்ட சோம்பு மற்றும் மிளகு ஆகிய பொருட்களை அதிகாரிகள் குப்பைகளில் கொட்டி அழித்தனர். மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையில் எந்த அனுமதியும் இல்லாமல், சாலையோரங்களில் விற்பனை செய்வற்கான உரிமமும் இல்லாமல் கலப்பட பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகளை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தனர்.

இனி இதுபோன்று கலப்பட பொருட்களை விற்பனை செய்தால் பொருட்களும், வண்டிகளும் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து விற்பனையாளர்கள் அங்கிருந்த மளிகை பொருட்களை லாரிகளில் ஏற்றி சென்றனர்.