படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

ஓசூர் அருகே தனியார் பள்ளியில்1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 5 கணினிகளை திருடிச்சென்ற 2 கட்டிட தொழிலாளர்களை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஒசூர் அருகேயுள்ள நல்லூரில் அத்வைத் அகாடமி என்கிற தனியார் சிபிஎச்சி பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தறொது கட்டுமான பணிகள் நடந்துவரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணினி அறையிலுள்ள 5 கணினிகள் திருடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளி முதல்வர் ஒசூர் அட்கோ காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இவ் திருட்டு தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பள்ளியில் கட்டிட வேலைகளை செய்து வந்த கட்டிட தொழிலாளி குறளரசனிடம் சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினர் தீவிர விசாரனை மேற்க்கொண்டனர். விசாரணையில் குரளரசன் தானும் தனது நன்பரும் சேர்ந்து பள்ளியிலிருந்த 5 கணினிகளை திருடியதாக ஒப்புக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் தருமபுரி பாலனூரை சேர்ந்த குறளரசனையும் அவருடன் வேலைபார்த்து வந்த மற்றொரு கட்டிட தொழிலாளி ரவி என்பவரையும் அட்கோ காவல் துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 5 கணினிகளை காவலர்கள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு 1.80 லட்சம் என கூறப்படுகிறது.

இருவரையும் ஓசூர் ஜேஎம் 2 நீதிமன்றத்தில் நேர்படுத்திய பின் ஓசூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.