படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்

Agriculture produce is increasing in Tamil Nadu for the past five years, says Balakirshna, Minister for Kaal Nadai Thurai.

Minister was in Kozhi Urpaththi maRRum mElaanmai college’s convocation ceremony.

After giving degree certificates to out going students, minister said that, the students who have completed their degree in the college will be placed 100%.  The credit for the same goes to Tamil Nadu Chief minister.

Further, speaking, he said that, Agriculture produce in Tamil Nadu is increasing for the past 5 years.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளது : ஒசூரில் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் பேச்சு   

ஒசூரில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தின் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லுரியில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு பணி நியமண ஆணை செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்  மற்றும் இடுபொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதந்த விழாவில் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண கலந்து கொண்டு பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கினார். மேலும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு இடுபொருட்களையும் வழங்கி கால்நடை வளர்ப்பு குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்சியில் பேசிய அமைச்சர் பாலகிருஷ்ண, ஒசூரில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தின் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லுரி உள்ளது. இந்த கல்லுரியில் தமிழகத்திலுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

இங்கு படித்து முடித்த அனைத்து மாணவர்களுக்கும் 100 சதவீதம் வேலை வாய்ப்பு உள்ளது. அவர்கள் சொந்தமாக தொழில் தொடங்கி உரிமையாளராக வரலாம், இந்த பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் இந்த கல்லுரியை தமிழக முதலமைச்சர் அவர்கள் அமைத்துள்ளார்கள். அதேபோல மாணவர்களுக்கு கால்நடை வளர்பு கோழி வளர்பு, மீன் வளர்பு பன்றி வளர்பு உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் ஆகிய இரண்டும் ஒன்றினைந்து உள்ளது. தமிழகம் கால்நடை வளர்பிபில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. கால்நடை மருந்தகங்களில் நவீன வசதிகள் எங்கும் இல்லாத அளவில் உள்ளது. தமிழகத்தில் கால்நடை வளர்ப்புக்காக அரசு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. கடந்த 50ஆண்டுகளில் இல்லாத அளவில் தமிழகத்தில் 5 ஆண்டுகளில் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த உற்பத்தி அதிகரித்து உள்ளது. என்று பேசினார்.