ஆன்ராய்டு செயலி android app hack
ஆன்ராய்டு செயலி android app hack

ஆன்ராய்டு செயலி -களை பதிவிறக்கம் செய்வதற்கு முன் எச்சரிக்கை தேவை

தகவல் தொழில்நுட்ப வல்லுனர் ஒருவர், தமது கைபேசி இணைப்பு தொண்டு வழங்கும் இணைய இணைப்பின் அலைக்கற்றை தானாகவே பயன்படுத்தப்பட்டு வருவதை கவணித்தார்.

மேலும் உற்று கவணிக்கையில், தனது திறம்படு-பேசி (Smart Phone)-யில் நிறுவப்பட்டுள்ள ஒரு ஆன்ராய்டு செயலி -யானது, தம் அனுமதியின்றி அலைக்கற்றயை பயன்படுத்திவருவதை கண்டுபிடித்தார்.

அவர், அந்த ஆன்ராய்டு செயலி -யின் மூலக் குறியீடுகளை ஆய்வு செய்தபோது, அந்த செயலி, கைபேசியின் திரையை அவ்வப்போது தாமாகவே திரைப்பிடித்தம் செய்து ஒரு வழங்கிக்கு (Server) தகவலாக அனுப்பிவருவதை கவணித்தார்.

மேலும், அந்த செயலி, தாம் விரல்களால் திரையை தடவும் போது, விரல் செல்லும் வடிவங்களையும் ஒரு நேரலை காட்சியாக அலைபருப்புவதையும் கண்டுபிடித்தார்.

தான் கைபேசியை பயன்படுத்தாத பொழுதும், கைபேசியின் ஒலிவாங்கி (Mic) இயக்கப்பட்டு, ஒலியானது, நேரலையாக அந்த வழங்கிக்கு அனுப்பப்படுவது அறிந்து அதிர்ந்தார்.

மேலும் தனது இந்த ஆய்வை தொடர்கையில், அந்த செயலி செயலிபார்வை (AppSee) என்ற அரு அமைப்பில் குழுவாக அங்கம் வகிப்பதையும், அதன் மூலம் தாம் திரட்டும் தகவல்களை பிற விளம்பர தொண்டு வழங்குவோருக்கும் பகிர்ந்து வருவதை கண்டரிந்தார்.

யான்டெக் மெட்ரிகா போன்ற தளங்களுக்கு தங்களின் தகவல் அனுப்பட்டு மேலும் பலருக்கு அது விற்கப்படும்.

நாம் பதிவிறக்கம் செய்து நிறுவும் செயலி, நிறுவும் முன்பே சில அனுமதிகளை கோறும். நாம் அதை முறையாக கவணிக்காது விட்டால், நாம், வீட்டின் படுக்கை அறையில் என்ன உரையாடுகிறோம் என்பது வரை அனைத்தையும் செயலி உருவாக்கியவரால் கண்காணிக்க முடியும்.

நாம் திறம்படு-பேசி மூலம் செயல்படுத்தும் அனைத்து பண பரிமாற்றங்கள் முதல், நாம் யாரை அழைக்குறோம், என்ன பேசுகிறோம், நமது துல்லியமான இருப்பிடம் என அனைத்து தகவல்களும் செயலி உருவாக்கியவரால் கண்காணிக்க முடியும்.

திறம்படுபேசி மட்டுமல்ல, நமது வாழ்வு அறையில் (Living Room/Main Hall) இருக்கும் திறம்படு தொலைக்காட்சிகளும் இத்தகைய தகவல்களை அலைபரப்பு செய்யலாம். நாம் வீட்டுனுள்ளும், படுக்கை அறையிலும் உரையாடும் உரையாடல்களை மற்றொருவர் கேட்கிறார், அதுவும் நேரலையாக என்றால், ஒரு முறைக்கு இருகுமுறை சிந்தித்து, கவணித்து செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்.

பொதுவாக, இத்தகைய தனிப்பயன் தகவல் திருட்டு, விளம்பர தொண்டு வழங்கிவருபவர்களுக்கு விற்கப்படும். நம்மை அறியாது நாம் சில பொருட்களுக்கு அடிமையாக இது வழிவகுக்கும்.